அரசியல்வாதியும், நடிகருமான சரத்குமாரை குறித்து மோசமாக பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை நடிகை ராதிகா வெளுத்து வாங்கி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாகவே திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மோசமான வார்த்தைகளை பேசி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

அந்த வகையில் இவர் சில மாதங்களுக்கு முன்பு நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் ஆன குஷ்புவை மோசமாக தவறாக பேசியிருந்தார். அவர் மட்டும் இல்லாமல் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியை கூட விமர்சித்து பேசி இருந்தார். இவர் பேசிய வீடியோவை கண்டித்து பலருமே கண்டனம் தெரிவித்திருந்தார்கள். இதை அடுத்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்துமே சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை தற்காலிகமாக நீக்கப்பட்டது மட்டுமில்லாமல் நிரந்தரமாகவே நீக்கி இருந்தார்கள்.

Advertisement

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி செய்த செயல்:

மேலும், குஷ்புவை குறித்து மோசமாக பேசிய வழக்கில் கிருஷ்ணமூர்த்தியை போலீஸ் கைது செய்திருந்தது. அதற்கு பிறகு அவர் ஜாமீனில் இருந்தும் வெளியே வந்தார். ஜாமினில் வெளியே வந்த பிறகு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தன்னுடைய செயலை நினைத்து வருத்தப்படுவதாக மன்னிப்பு கேட்டிருந்தார். அது மட்டும் இல்லாமல் தன்னுடைய கட்சியில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுதிருந்தார்.

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி:

இதை திமுக தலைமை ஏற்றுக் கொண்டது. அதோடு ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. இப்படி இருக்கும் நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மீண்டும் நடிகர் சரத்குமாரை மோசமாக பேசி இருக்கிறார். இதற்கு நடிகையும், பாஜக வேட்பாளருமான ராதிகா சரத்குமார் சோசியல் மீடியாவில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.

Advertisement

ராதிகா பதிவு:

அதில் அவர், ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருந்த மாட்டியா? உன்னை எல்லாம் இன்னும் அந்த கட்சியில் வெச்சிருக்காங்களே அவங்கள தான் குத்தம் சொல்லணும். இதுல உனக்கு அந்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தியோட பேரு வேற! உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம் கடுமையாக தண்டிக்கப்படனும். shame on திமுக என்று கூறி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ராதிகா சரத்குமார் டேக் செய்து இருக்கிறார். தற்போது இவரின் பதிவு தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

ராதிகா குறித்த தகவல்:

தமிழ் சினிமாவில் 80, 90 கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர் ராதிகா . இவர் தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் தொடங்கி தற்போது இருக்கும் சூர்யா, விஷால், விஜய், விஜய் சேதுபதி என்று பல்வேறு நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் சினிமாவை தாண்டி சின்னத்திரையில் கலக்கி வருகிறார். அதோடு இவர் அரசியலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் தான் இவர் பாஜகவில் சேர்ந்தார்.

Advertisement