சித்தா படத்தின் பிரஸ் மீட்டிங்கில் கன்னட அமைப்பினர் பிரச்சனை செய்து சித்தார்த்தை மிரட்டி வெளியேற்றிருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர், திரைக்கதை, எழுத்தாளர் என பன்முகம்கொண்டவர். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

சமீப காலமாகவே சித்தார்த் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சித்தா. இந்த படத்தை ETAKI ENTERTAINMENT நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் சித்தார்த்துடன் நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர், சஹஷ்ரா ஸ்ரீ உட்பட பல நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை இயக்குனர் அருண்குமார் எழுதி இயக்கி இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

Advertisement

வைரலாகும் வீடியோ:

பின் இப்போது இந்த படம் தேவையா? தமிழ் படத்தை பற்றி இப்போது இங்கு பேசணுமா? நீங்கள் எல்லோரும் வெளியில் வந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீரை கொடுக்கக் கூடாது என்று போராடுங்க. அதை விட்டு படத்தைப் பற்றி பேசுவதா? ஆர்டர் போட நாங்க வரல. ஆனா கோரிக்கையா கேட்கிறோம் என்று கோஷமிட்டு பேசி இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் அந்த அமைப்பினர் சித்தார்த்தை தொடர்ந்து வெளியேறுமாறு மிரட்டி இருக்கின்றனர். பின் சித்தார்த் அங்கிருந்து வெளியேறினார். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராதிகாவின் பதில்:

நேற்று கோவையில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் ராதிகா அப்போது அவரிடம் காவிரி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் சித்தத்திற்கு நடந்தது பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது அதற்கு ராதிகா நான் அதை பார்க்கவில்லை என்றார் காவேரி விஷயத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக கன்னட நடிகர்கள் ஆர்ப்பாட்டம் செய்யும்போது தமிழ் நடிகர்கள் சித்தாத்தின் கட்டாயம் வெளியேற்றத்திற்கு ஒரு ஆர்ப்பாட்டம் செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பினர்.

Advertisement

அதற்கு ஒரு பதில் அளித்த ராதிகா அப்படியா எனக்கு இரண்டு நாட்களாக உடல்நிலை சரியில்லை நான் விளம்பரம் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். நடிகர் சித்தார்த் பற்றிய கேள்விப்பட்டேன் என்றார். மேலும் பத்திரிக்கையாளர் இல்லை அவரை வெளியே போக சொன்னார்கள் என பத்திரிகையாளர்கள் கூறியதற்கு ராதிகா. அங்கு போராட்டம் செய்தவர்கள் தண்ணீர் பிரச்சனையை பற்றி பேசினார்கள். அவர்கள் சித்தார்த் வெளியே போங்கள் என்று கூறவில்லை தண்ணீர் பிரச்சனை பற்றி பேசியது மட்டும் தான் நான் பார்த்தேன் என்றும் பதிலளித்திருந்தார்.

Advertisement
Advertisement