நல்லது செய்யும், மரியாதை தரும் கட்சிக்கு தான் செல்வேன் - நடிகர் ராகவா லாரன்ஸ் பளீச் பதில்
நல்லது செய்யும், மரியாதை தரும் கட்சிக்கு தான் செல்வேன் - நடிகர் ராகவா லாரன்ஸ்
கடந்த சில வாரங்களாகவே ராகவா லாரன்ஸ் திருச்சி தொகுதியில் நிற்க போகும் செய்தி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர், முதல்வர் விஜய் அவர்கள் ராஜினாமா செய்திருக்கிறார். இதை அடுத்து அந்த தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. அதில் தவெக சார்பாக நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிட போவதாக சோசியல் மீடியாவில் தகவல்கள் வந்து பண்ணம் இருக்கின்றது. சமீபத்தில் இது தொடர்பாக நடிகர் ராகவா லாரன்ஸ், என்னுடைய அம்மா நான் அரசியலுக்கு செல்வதற்கு ஆசிர்வாதம் கொடுத்துவிட்டார்.
நான் அரசியலுக்கு வரணுமா? வர வேண்டாமா? என்று ரசிகர்கள், மக்களாகிய நீங்கள் சொல்லுங்கள் என்று சொல்லி இருந்தார். இதை அடுத்து ராகவா லாரன்ஸ் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் திருச்சி தொகுதியில் நிற்க வேண்டும் என்றெல்லாம் கூறியிருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் ராகவா லாரன்ஸ், சிஎம் விஜயை நேரில் சந்தித்திருந்த புகைப்படங்கள் எல்லாம் வெளியானது. இதை அடுத்து சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் ராகவா லாரன்ஸ், தெரு நாய் கதையை சொல்லியிருந்தார்.
ராகவா லாரன்ஸ் பேட்டி:
இதனால் நிட்டிசன்கள் பலருமே இவர், மக்களை நாய் உடன் ஒப்பிட்டு பேசுகிறார் என்றெல்லாம் விமர்சித்து இருந்தார்கள். இது தொடர்பாக சோசியல் மீடியாவில் சலசலப்பு தொடங்கி இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட விளக்க வீடியோவில், நான் இந்த வீடியோவில் இரண்டு விஷயங்களை சொல்ல போகிறேன். சமீபத்தில் நான் பேசியது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி இருக்கிறது. இன்னொன்று திருச்சி கிழக்கு தொகுதி. முதலில் நான் அந்த வீடியோ பிரச்சனையை சொல்லி விடுகிறேன்.
சர்ச்சைகளுக்கு விளக்கம்:
உதாரணத்திற்கு நான் ஒரு கதையை சொன்னேன். ஆனால், நிறைய பேர் அதை தவறாக புரிந்து கொண்டு விமர்சித்திருந்தது எனக்கு அதிக வலி கொடுத்தது. இன்னொன்று திருச்சி கிழக்கில் போட்டியிடப் போகிறீர்களா? என்று நிறைய பேர் என்னிடம் கேட்டார்கள். அந்த இடத்தில் நான் போட்டியிட்டால் நன்றாக இருக்குமா? தவெக கட்சிக்காக உழைத்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். விஜய் ரசிகர் மன்றம் தொடங்கிய காலத்தில் இருந்து போஸ்டர் ஒட்டி இன்று அரசியல் உருவாகி இருக்கும் வரை ஒருவர் கஷ்டப்பட்டு உழைத்திருப்பார். நான் சேர்ந்த உடனே சீட் கிடைத்து விட்டால் அந்த கட்சியில் உழைத்தவர்கள் நிலைமை என்ன? கட்சிக்காக நிறைய பேர் உழைத்திருக்கிறார்கள்.
அரசியல் பற்றி சொன்னது:
திருச்சி தொகுதியில் நிற்பதற்காகவும் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது நான் நிற்பது எப்படி தர்மமாகும்? இதை முதல்வர் விஜய் தான் முடிவு எடுக்கணும். முதலில் நான் கட்சியில் உறுப்பினராக சேர வேண்டும். கட்சிக்காக உழைக்க வேண்டும். கட்சியின் கொள்கைகளை நான் சொல்ல வேண்டும். எடுத்தவுடனே கட்சியின் எம்எல்ஏவாக இருப்பது சரியாக இருக்காது. நான் மக்களுக்காக சேவை செய்ய வந்தேன். திருச்சி கிழக்கு தொகுதியில் நான் நிற்கப் போவதில்லை. அதற்காக நான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று நினைக்க வேண்டாம். பொறுமையாக எங்கு சென்றால் நல்லது செய்ய முடியுமோ, மரியாதை இருக்குமோ அங்கு தான் செல்வேன் என்று கூறி இருக்கிறார்.