மக்கள் பணத்தையே வாங்கி அவர்களுக்கே செலவு செய்ய பிடிக்கவில்லை - அரசியல் பற்றி ராகவா லாரன்ஸ் ஓபன் டாக்
அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் நடனத்தின் மூலம் தான் சினிமா துறைக்குள் நுழைந்தார். பின் இவர் சினிமாவில் பிரபலமான நடன இயக்குனர் ஆனார். தற்போது இவர் நடிகர், நடன இயக்குனர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்டு திகழ்ந்து வருகிறார்.
இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இவர் 17 வருடங்கள் கழித்து வெளிவந்த சந்திரமுகி 2 படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் பி. வாசு தான் இந்த இரண்டாம் பாகத்தை இயக்கி இருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. இதை தொடர்ந்து இவர் ருத்ரன் என்ற படத்தில் நடித்து இருந்தார்.
ராகவா லாரன்ஸ் குறித்த தகவல்:
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது. இதை அடுத்து நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் அதிகாரம், பென்ஸ், கால பைரவா, புல்லட், காஞ்சனா 4 போன்ற பல படங்களில் தொடர்ந்து கமிட் ஆகி நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் நடிகர் ராகவா லாரன்ஸ் ‘மாற்றம்’ என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கியுள்ளார்.
சமூக சேவை:
இந்த அறக்கட்டளை மூலம், உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவி செய்து வருகிறார். ஏழை, எளிய மாணவ மாணவிகள் படிப்பிற்கு உதவி செய்வதோடு, கொடிய நோயால் அவஸ்தைப்படுபவருக்கு மருத்துவ உதவிகள் செய்து வருகிறார். இவரால் பயனடைந்தவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர் என்று கூறலாம். மேலும், அவரால் படித்து ஆளாக்கப்பட்ட மாணவர்கள் தற்போது நல்ல நிலைமைக்கு உயர்ந்துள்ளனர். அவர்களும் ராகவா லாரன்ஸ் போல் ஏழை எளியோருக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறார்கள்.
ராகவா லாரன்ஸ் பேட்டி :
மேலும், அவர்களையும் தன்னுடன் இனைத்துக் கொண்டு ‘மாற்றம்’ என்ற பெயரில் கடந்த ஆண்டு முதல் சேவை அமைப்பு தொடங்கி இருக்கிறார். இதன் மூலம் ராகவா லாரன்ஸ் பல்வேறு நல திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதோடு இந்த சமூக சேவை எல்லாம் அரசியலில் வருவதற்காக தான் ராகவா லாரன்ஸ் செய்கிறார் என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் ராகவா லாரன்ஸ் அரசியல் குறித்து கூறியிருந்தது, என்னை பார்த்து நிறைய பேர் நீங்கள் எப்போது அரசியலுக்கு வர போகிறீர்கள்? என்று கேட்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=mBLLUMu93CU
அரசியல் பற்றி சொன்னது:
நான் எதற்கு அரசியல் வரவேண்டும். இப்போதே நான் நல்லது செய்து கொண்டு தான் இருக்கிறேன். அரசியலுக்கு வந்து மக்கள் பணத்தை வாங்கி மக்களுக்கு நல்லது செய்து அதை போஸ்டர் அடித்து ஓட்டுவதில் எனக்கு விருப்பம் கிடையாது. நான் உழைத்த பணத்தில் மனதார மக்களுக்கு செய்யும் நல்லதே பெரியது என்று நான் நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார். தற்போது இவரின் பதில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது.