ஒருவழியாக சஸ்பென்ஸ் உடைத்த நடிகர் ராகவா லாரன்ஸ் - என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க
ராகவா லாரன்ஸ் அரசியல் வீடியோ
தமிழகத்தின் முதல்வராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஜோசப் விஜய். சினிமாவை தாண்டி விஜய் அரசியலில் இறங்கி இருக்கிறார். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று கட்சியை தொடங்கி இரண்டு ஆண்டுகள் தான் ஆனது இவருடைய பேச்சு முழு அரசியல்வாதியாக இருக்கிறது என்று பலரும் பாராட்டிருந்தார்கள். இதை அடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி நடந்த தேர்தலில் தவெக கட்சி சார்பில் விஜய் அவர்கள் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இதுவரை இல்லாத அளவிற்கு 85 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்ததாக அறிவித்திருந்தார்கள். தமிழகத்தில் 108 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் தவெக கட்சி இருந்தது. இது மிகப்பெரிய வரலாற்று சாதனையாகவே பார்க்கப்பட்டது. முதல்வர் விஜய் அவர்கள் தங்களின் பணியை சிறப்பாக செய்து கொண்டு வருகிறார்.
இது ஒரு பக்கம் இருக்க திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர், முதல்வர் விஜய் அவர்கள் ராஜினாமா செய்திருக்கிறார். இதை அடுத்து அந்த தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. அதில் தவெக சார்பாக நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிட போவதாக கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியாவில் தகவல்கள் வந்து பண்ணம் இருக்கின்றது. பின் இது தொடர்பாக நடிகர் ராகவா லாரன்ஸ், நான் திருச்சி கிழக்கு தொகுதி தேர்தலில் போட்டியிடப் போவதாக பல்வேறு சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றது.
திருச்சி கிழக்கு தொகுதி:
என்னுடைய ஊடக நண்பர்கள் பலருமே இது தொடர்பாக விளக்கம் கேட்டு என்னை தொலைபேசி வாயிலாகவும், நேரில் சந்திக்கவும் தொடர்ந்து பேசிக் கொண்டு வருகிறார்கள். இந்த தகவல்களுக்கு நான் கட்டாயம் விளக்கம் அளிக்கக்கூடிய ஒரு நிலையில் இருக்கிறேன். இந்த தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறேன். நான் இப்போது பென்ஸ் படத்தினுடைய படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறேன். என்னுடைய இந்த ஷெட்டில் வரும் பத்தாம் தேதியுடன் முடிகிறது. என்னுடைய தாயார் ஆசிர்வாதத்துடன் என்னுடைய வாழ்க்கை குறித்த ஒரு முக்கியமான முடிவை வரும் 11ஆம் தேதி வியாழக்கிழமை 9.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்றார்.
லாரன்ஸ் வீடியோ:
இப்படி இருக்கும் நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் கிட்டத்தட்ட திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது. இது தொடர்பாக ராகவா லாரன்ஸ் வெளியிட்ட வீடியோவில், எதையும் எதிர்பாராமல் உங்களுடைய கடமையை நேர்மையுடன் செய்யுங்கள். எனக்கு உங்களின் ஆலோசனையும் வழிகாட்டுதலும் தேவை. நான் அரசியலுக்கு வருவேன் என்று ஒருபோதுமே நினைத்து பார்த்ததில்லை. படம் சம்பாதிக்க வேண்டும் என்றோ ஏதேனும் ஒரு பதவியை பிடிக்க வேண்டும் என்று எனக்கு எந்த நோக்கமும் கிடையாது.
அரசியல் பற்றி சொன்னது:
நான் முழுமையாக நம்பும் எனக்கு மிக மிக நெருக்கமான ஒருவர் அரசியலில் தடம் பிடித்ததால், அவருக்கு பக்கபலமான நின்று ஒரு தனி மனிதனாக நான் செய்து வரும் சமூக சேவையை விட இன்னும் பெரிய அளவில் சமுதாயத்திற்கு பணியாட்ட வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய ஒரே எண்ணமாக இருக்கிறது. ஆனால், இன்று சூழ்நிலைகள் என்னை அரசியலில் களம் காண வேண்டிய ஒரு புள்ளிக்கு கொண்டு வந்திருக்கிறது. உங்களுடைய அனைவரின் ஆசிகளுடன் நான் எடுத்து வைக்கும் இந்த மிக முக்கியமான அடியில் உங்களின் ஆலோசனைகளும் வழிகாட்டுதலும் எனக்கு பெரும் துணையாக இருக்க வேண்டும். என் அம்மாவும் என்னுடைய அரசியல் பயணத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து விட்டார் என்று பேசி இருக்கிறார்.