கரையானால் நிலைகுலைந்து கதறும் குடும்பம், ராகவா லாரன்ஸ் செய்த செயல் - குவியும் வாழ்த்துக்கள்

By subhashini · 9/5/2025

கரையானால் நிலைகுலைந்த குடும்பத்திற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் செய்திருக்கும் உதவி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் நடனத்தின் மூலம் தான் சினிமா துறைக்குள் நுழைந்தார். அதன் பின் இவர் சினிமாவில் பிரபலமான நடன இயக்குனர் ஆனார். தற்போது இவர் நடிகர், நடன இயக்குனர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்டு திகழ்ந்து வருகிறார்.

இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகியிருந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது. இதை அடுத்து நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் அதிகாரம், பென்ஸ், கால பைரவா, புல்லட், காஞ்சனா 4 போன்ற பல படங்களில் தொடர்ந்து கமிட் ஆகி நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் நடிகர் ராகவா லாரன்ஸ் ‘மாற்றம்’ என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கியுள்ளார்.

ராகவா லாரன்ஸ் குறித்த தகவல்:

இந்த அறக்கட்டளை மூலம், உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவி செய்து வருகிறார். ஏழை, எளிய மாணவ மாணவர்கள் படிப்பிற்கு உதவி செய்வதோடு, கொடிய நோயால் அவஸ்த்தை படும் ஏழை மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்து வருகிறார். இவரால் பயனடைந்தவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர் என்று கூறலாம். மேலும், அவரால் படித்து ஆளாக்கப்பட்ட மாணவர்கள் தற்போது நல்ல நிலைமைக்கு உயர்ந்துள்ளனர்.

சமூக சேவை:

அவர்களும் ராகவா லாரன்ஸ் போல் ஏழை எளியோருக்கு உதவி செய்து வருகிறார்கள்.மேலும், அவர்களையும் தன்னுடன் இனைத்துக் கொண்டு ‘மாற்றம்’ என்ற பெயரில் கடந்த ஆண்டு முதல் சேவை அமைப்பு தொடங்கி இருக்கிறார் லாரன்ஸ். இப்படி இருக்கும் நிலையில் கரையானால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ராகவா லாரன்ஸ் செய்திருக்கும் உதவி தான் இணையத்தில் காட்டுத்தீயாய் வைரலாகி வருகிறது. அதாவது, ஒரு ஏழை குடும்பம் சிட்டுக்குருவி போல பல ஆண்டுகளாக தாங்கள் சம்பாதித்த பணத்தை சேமித்து ஒரு டப்பாவில் வைத்து மண்ணில் புதைத்து வைத்திருந்தார்கள்.

கரையானால் பாதிக்கப்பட்ட குடும்பம்:

கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் வரை சேமித்திருக்கிறார்கள். பின்னர் தங்களுடைய தேவைக்காக அந்த பணத்தை எடுத்து இருக்கிறார்கள். ஆனால், பணம் முழுவதையும் கரையான் அரித்து இருக்கிறது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த குடும்பம் கண்ணீர் விட்டு கதறி அழுது இருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கின்றது. இந்நிலையில் அந்த வீடியோவை பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ் அந்த குடும்பத்தை நேரில் அழைத்து கரையான் அரித்த ஒரு லட்சம் ரூபாய் வழங்கி இருக்கிறார்.

ராகவா லாரன்ஸ் பதிவு:

பின் இது தொடர்பான வீடியோவை லாரன்ஸ் சோசியல் மீடியாவிலும் பதிவிட்டு, ஒரு கூலி தொழிலாளி குடும்பம் தங்களுடைய பல வருட சேமிப்பில் சேர்த்த ஒரு லட்சம் ரூபாயை கரையான் அளித்த செய்தி கேள்விப்பட்டேன். அவர்கள் என்ன கஷ்டப்பட்டு இருப்பார்கள் என்பதை நினைத்து என் இதயம் பதறிப் போனது. அதனால் அவர்கள் இழந்த பணத்தை அவர்களுக்கு வழங்கி விட்டேன். இது எனக்கு ரொம்ப சந்தோஷத்தை கொடுக்கிறது. இந்த செய்தியை எனக்கு கொண்டு வந்த ஊடகங்களுக்கும், அதில் ஈடுபட்ட மக்களுக்குமே ரொம்ப நன்றி என்று கூறியிருக்கிறார். இந்த செய்தியை பார்த்து பலருமே பாராட்டி வருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full