சினிமாவில் சாதியைத் திணிப்பது ரொம்ப தவறு - நிகழ்ச்சியில் நடிகர் ராகவா லாரன்ஸ் சொன்ன விஷயம்

By subhashini · 8/3/2025

கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் நடனத்தின் மூலம் தான் சினிமா துறைக்குள் நுழைந்தார். அதன் பின் இவர் சினிமாவில் பிரபலமான நடன இயக்குனர் ஆனார். தற்போது இவர் நடிகர், நடன இயக்குனர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்டு திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது. இதை அடுத்து நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் அதிகாரம், பென்ஸ், கால பைரவா, புல்லட், காஞ்சனா 4 போன்ற பல படங்களில் தொடர்ந்து கமிட் ஆகி நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் நடிகர் ராகவா லாரன்ஸ் ‘மாற்றம்’ என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த அறக்கட்டளை மூலம், உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

ராகவா லாரன்ஸ் குறித்த தகவல்:

ஏழை, எளிய மாணவ மாணவிகள் படிப்பிற்கு உதவி செய்வதோடு, கொடிய நோயால் அவஸ்த்தை படும் ஏழை மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்து வருகிறார். இவரால் பயனடைந்தவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர் என்று கூறலாம். மேலும், அவரால் படித்து ஆளாக்கப்பட்ட மாணவர்கள் தற்போது நல்ல நிலைமைக்கு உயர்ந்துள்ளனர். அவர்களும் ராகவா லாரன்ஸ் போல் ஏழை எளியோருக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறார்கள்.

சமூக சேவை:

மேலும், அவர்களையும் தன்னுடன் இனைத்துக் கொண்டு ‘மாற்றம்’ என்ற பெயரில் கடந்த ஆண்டு முதல் சேவை அமைப்பு தொடங்கி இருக்கிறார் லாரன்ஸ். இதன் மூலம் ராகவா லாரன்ஸ் பல்வேறு நல திட்ட உதவிகளை செய்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டிருந்தார். புதுக்கோட்டை மாவட்டம் குருக்களையாப்பட்டியை சேர்ந்த விஷ்ணு என்ற சிறுவன் தன்னுடைய கிராமத்திற்கு குடிநீர் வசதி இல்லை இல்லையென்றும், அதற்கான ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

நிகழ்ச்சியில் ராகவா லாரன்ஸ்:

உடனே ராகவா லாரன்ஸ் அந்த சிறுவனின் கோரிக்கையை ஏற்று தன்னுடைய அறக்கட்டளை மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.பின் செய்தியாளர்களை சந்தித்த ராகவா லாரன்ஸிடம் நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு லாரன்ஸ், இதற்கு முன்பு தெலுங்கில் விஜய்சாந்தியை லேடி சூப்பர் ஸ்டார் என்று சொன்னார்கள். தற்போது நடிகை நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்கிறார்கள். அது தவறு கிடையாது.

https://www.youtube.com/watch?v=EpG9i-C37Z4

சினிமா நிலைமை:

அதேபோல் அவர் அந்த பட்டத்தை வேண்டாம் என்று சொல்கிறார். அது அவருடைய விருப்பம் என்று கூறுகிறார். பின் விஜயகாந்த் நடிகர் சங்கத்தை நடத்தியது போல் இப்போதும் நடத்துகிறார்களா? என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு லாரன்ஸ், விஜயகாந்த் போல் ஒருவர்தான் இருக்க முடியும். அவரைப் போல் வேறு யாரும் வர முடியாது. அதேபோல் அரசியலுக்கு வந்திருக்கிற என்னுடைய நண்பர் விஜய் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள். சமீபகாலமாகவே ஜாதி ரீதியான திரைப்படங்கள் அதிக அளவு வருகிறது. ஜாதி திணிப்பு தலை தூக்கி நிற்கிறது. இது ரொம்பவே தவறான விஷயம். இந்த நிலைமை மாறினால் நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full