இது மிகப்பெரிய லெஜண்ட் பயன்படுத்திய பொருள் - ஜி.வி பிரகாஷுக்கு ஏ,ஆர். ரஹ்மான் கொடுத்த பரிசு

By subhashini · 1/10/2025

தேசிய விருது வாங்கிய ஜி வி பிரகாஷுக்கு ஏ.ஆர்.ரகுமான் கொடுத்து இருக்கும் பரிசு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வருடம் வருடம் இந்திய சினிமாவின் சிறந்த படைப்புகளை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசால் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இதை முதன் முதலாக 1954 ஆம் ஆண்டு தான் தொடங்கி இருந்தார்கள். தற்போது 71 ஆவது தேசிய திரைப்பட விருது விழா நடைபெற்றது. இருக்கிறது. 2023 ஆம் ஆண்டு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட படங்களுக்கு தான் இந்த விருது வழங்கப்பட்டது.

இதில் சிறந்த இசையமைப்பாளர் என்ற பிரிவில் ஜி.வி பிரகாஷுக்கு தேசிய விருது வழங்கப்பட்டிருக்கிறது. இது இவருடைய இரண்டாவது தேசிய விருது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்த வாத்தி படத்தில் இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் பணியாற்றி இருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற வா வாத்தி என்ற பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இந்த பாடலுக்காக தான் ஜி.வி பிரகாஷுக்கு தேசிய விருதும் கிடைத்து இருக்கிறது.

ஏ.ஆர்.ரகுமான் அளித்த பரிசு:

இந்நிலையில் இந்த சாதனைக்கு ஜி.வி பிரகாஷின் குருவும், மாமாவும் ஆன பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து தெரிவித்து தன்னுடைய பியானோவை பரிசை அளித்திருக்கிறார். மேலும், இது தொடர்பாக ஜி.வி பிரகாஷ் பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், நான் பெற்றதிலேயே மிகச் சிறந்த பரிசு இதுதான். இரண்டாவது முறையாக தேசிய விருது பெற்றதற்காக ஏ.ஆர் ரகுமான் சார் இந்த அழகான வெள்ளை பியானோவை எனக்கு பரிசாக கொடுத்தார்.

ஜி.வி.பிரகாஷ் பதிவு:

மிக்க நன்றி ஏ.ஆர்.ரகுமான் சார். இது ரொம்ப அர்த்தமுள்ள ஒன்று. இந்த பியானோ லெஜன்ட் பயன்படுத்திய ஒன்று. இதை விட சிறந்த பரிசாக எதையும் கேட்க முடியாது என்று கூறி இருக்கிறார். ஜிவி பிரகாஷின் இந்த பதிவு இணையத்தில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். கோலிவுட்டில் மிக பிரபலமான இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் சாதித்து வருபவர் ஜிவி பிரகாஷ்.

ஜி.வி.பிரகாஷ் குறித்த தகவல்:

இவர் இரு ஆஸ்கார் விருதுகளை அள்ளி வந்து பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஜி.வி பிரகாஷ் அவர்கள் முதன் முதலாக வெயில் என்ற படத்தில் இசை அமைத்து தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். அதை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். அதன் பின் ஹீரோவாக இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இதனால் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full