#metoo சர்ச்சையில் கிரிக்கெட் வீரர் ட்ராவிட்டா ? ட்விட்டரில் வெளியான வீடியோ ..!
கடந்த சில நாட்களாக metoo விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. சினிமா பிரபலங்கள் மட்டுமே metoo விவகாரத்தில் சிக்கி வந்த நிலையில் கிரிக்கெட் வீரர்கள் சச்சின், மலிங்கா போன்றவர்கள் மீதும் சில குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
ஆனால், அந்த குடற்சாட்டுக்கள் எல்லாம் போலியானவை என்று பின்னர் தெரியவந்தது. இந்நிலையில் சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் #metoo மொமென்டில் பிரபல இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் ட்ராவிடின் பெயரும் அடிபட்டது.
சமீபத்தில் வெளியான அந்த வீடியோவில் ராகுல் ட்ராவிட்டிடம் பேட்டி எடுத்துக்கொண்டிருக்கும் பெண் ஒருவர் நான் உங்கள் ரசிகர் என்றும் உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று குறிகொண்டே அவரை நெருங்குகிறார்.
பின்னர் அவரை தடுத்து நிறுத்து டிராவிட் உன் வயது என்ன என் வயது என்ன? ஒழுங்காக படிப்பில் கவனம் செலுத்து என்று அறிவுரை கூறுகிறார். பின்னர் தான் தெரிந்தது அந்த ட்ராவிட்டை ஏமாற்றுவதற்காக செய்த பிராங்க் என்று. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.The only #MeToo expose that will shock me, if it ever happens will be Rahul Dravid. Please never let it happen.
— Divya (@divya_16_) October 14, 2018