நாளை நடைபெறவிருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவதத்தில் கலந்து கொள்ளவிருக்கும் ராகுல் காந்தி எம்.பி.

By Dhilip Kumar · 7/8/2023

நாளை நடைபெற உள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ராகுல் காந்தி கலந்து கொள்ள போகிறார் என எதிர்கட்சிகள் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றன. ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்ததையடுத்து அவருக்கு 5 மாதங்கள் பிறகு மீண்டும் எம்.பி பதவி வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அவர் இன்று 12 மணிக்கு நாடாளுமன்றத்திற்கு சென்றார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலாலம்பூரில் நடைபெற்ற மக்களைவை தேர்தலில் அவர் “எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவைகிறது” என்றார்.

இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேச்சு ஒரு சமூகத்தினரை இழிவு படுத்துவதாக கூறி பாஜக எம்.எல்.ஏ புர்னேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மார்ச் 24-ம் தேதி சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 வருட சிறை தண்டனையை வழங்கியது. மேலும் இவரின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது. இந்த தண்டனயை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தி குஜராத் நிதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார் குஜராத் நிதிமன்றம் அதை நிராகரித்தது.


உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பிக்கு இடைக்கால தடையை விதித்தது. உச்சநீதிமன்றத்தில் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு “ராகுல் காந்தியின் தகுதி இழப்பால் விரைவில் இடைதேர்தல் வைக்க கூடும் என்றும் அவரால் நாடாளுமன்றத்தில் பங்கேற்க முடியவில்லை என்றும் எனவே 2 ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடைவிதிக்க கோரிக்கை வைக்கிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். அதனால் அவருக்கு மீண்டும் எம்.பி பதவி வழங்கப்பட்டு இருந்தது.

நம்பிக்கையில்லா தீர்மானம்:

தகுதிநீக்க உத்தரவு திரும்பப் பெற்ற நிலையில் இன்று 12 மணியவில் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார் ராகுல் காந்தி. எதிர் கட்சிகளின் அமளியால் அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்றதிர்ற்கு வருகை தந்தார். அவருக்கு அவரின் தொண்டர்கள் சிறப்பான வரவேற்ப்பை அளித்தனர்.


பாஜகவுக்கு எதிராக நடைபெற உள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ராகுல் காந்தி கலந்து கொள்வர் எனவும் அதற்காக மோடி பயபடுகிறாரா என்றும் எதிர்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றது. நாளை நடைபெற்ற உள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அவர் கலந்து கொள்வர் என்பது உறுதியாகிவிட்டது. ராகுல் காந்தியின் நாடாளுமன்ற வருகையால் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கு புத்துணர்ச்சியை அளித்துள்ளது.

behindtalkies AMP · Quick view
View full