அந்த காட்சியில் உண்மையிலே ராஷ்மிகா உடைந்து போய் அழுதார் - இயக்குனர் ராகுல் ரவீந்திரன் ஓபன் டாக்
தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் ‘இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த குபேரா படத்தில் ராஷ்மிகா நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அதன் பின் பாலிவுட்டில் வெளிவந்த தம்மா படத்தில் ராஷ்மிகா நடித்து இருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ராஷ்மிகா அவர்கள் மைசா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மட்டும் இல்லாமல் இன்னும் சில படங்களிலும் நடிக்கிறார்.
ராஷ்மிகா குறித்த தகவல்:
அந்த வகையில் கடைசியாக ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி இருந்த படம் கேர்ள்பிரண்ட். இந்த படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்கி இருக்கிறார். ஆணாதிக்க சிந்தனை நிறைந்த உலகத்தில் சிக்கி தவிக்கும் ஒரு பெண்ணினுடைய போராட்டத்தை மையமாக வைத்து தான் இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இந்த படம் தொடர்பாக அளித்த பேட்டியில் இயக்குனர் ராகுல் ரவீந்திரன், இந்தப் படத்தில் ரொம்ப கஷ்டமான காட்சி என்றால் அது கதவு காட்சி தான்.
ராகுல் பேட்டி:
ராஷ்மிகாவுக்கும் எனக்கும் அந்த காட்சி ரொம்பவே உருக்கமானதாக இருந்தது. அந்த காட்சிதான் படத்தினுடைய விதை. என்னுடைய சொந்த வாழ்க்கையிலும் நான் பார்த்த ஒன்றுதான் அந்த காட்சியாக வைத்தேன். இந்த ஒரு காட்சிக்காக நான் ராஷ்மிகாவிடம், நீங்கள் பூமாவை போல யோசிக்க வேண்டும் என்று கேட்க மாட்டேன். இந்த காட்சியில் ராஷ்மிகாவைப் போல யோசிக்க சொல்கிறேன். உங்கள் வாழ்க்கையில் உங்களை பலர் துன்புறுத்தி இருப்பார்கள்.
ராஷ்மிகா அழ காரணம்:
அதை ஒவ்வொரு முறையும் நினைத்துப் பாருங்கள். அது எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அதை உள்ளிருந்து நடிக்க சொன்னேன். அந்த காட்சி முடிந்ததும் ராஷ்மிகா ரொம்பவே மனமுடைந்து போய் கட்டுப்படுத்த முடியாமல் சுமார் 20 நிமிடங்கள் அழுது கொண்டிருந்தார். நான் அப்படி நடிக்க சொன்னதால் அவருக்குள் ஆழமாக புதைத்து வைத்திருந்த ஏதோ ஒன்று வெளியே வந்தது. அவர் பல ஆண்டுகளாக அடக்கி வைத்திருந்த ஒன்று போல இருந்தது என்று கூறியிருக்கிறார்.