மிஸ்டர் வாசுதேவன், உங்க பையன் ஜெயிச்சிட்டான் - நெகிழ்ச்சியில் சரத்குமார் மகன் ராகுலின் பதிவு

By subhashini · 23/8/2025

தன்னுடைய தந்தை பற்றி நெகிழ்ச்சியில் சரத்குமாரின் மகன் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்பவர் சரத்குமார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. தற்போது இவர் குணச்சித்திர வேடங்களில் கலக்கி கொண்டு வருகிறார். இவர் சினிமாவை தாண்டி அரசியல்வாதியாகவும் கலக்கி வருகிறார்.

இதனிடையே இவர் 1984 ஆம் ஆண்டு சாயாதேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்த மகள் தான் வரலட்சுமி சரத்குமார். வரலட்சுமி மட்டுமில்லாமல் பூஜா என்ற இன்னொரு மகளும் சரத்குமாருக்கு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரின் திருமண வாழ்க்கையும் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. பின் இடையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பேருமே பரஸ்பரமாக 2000 ஆண்டு விவாகரத்து செய்து கொண்டு பிரிந்து விட்டார்கள்.

சரத்குமார் திருமண வாழ்க்கை:

விவாகரத்து பிறகு சாயாதேவி தன்னுடைய மகள் வரலட்சுமி உடன் தான் தனியாக வசித்து வசித்து வருகிறார். பின்னர் சரத்குமார் அவர்கள் நடிகை ராதிகாவை 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராகுல் என்ற ஒரு மகன் இருக்கிறார். தற்போது ராகுல் தன்னுடைய பட்டப்படிப்பை வெளிநாட்டிற்கு சென்று படித்து முடித்து இருக்கிறார். இவர் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கிறார். அதை கண்டு சரத்குமார் மகிழ்ந்திருக்கிறார்.

ராகுல் பதிவு:

இந்த நிலையில் இது தொடர்பாக நெகிழ்ச்சியில் சரத்குமார் மகன் ராகுல் பதிவு போட்டிருக்கிறார். அதில் அவர், என்னுடைய தந்தை எனக்காக எல்லாவற்றையும் செய்திருக்கிறார். அவர் உண்மையிலேயே என்னுடைய சூப்பர் ஹீரோ. என்னுடைய சிறந்த நண்பர். இருளில் என்னுடைய ஒளி. என்னை வேறு ஒரு நாட்டிற்கு படிக்க அனுப்புவதற்காக என்னுடன் நேரம் செலவிடுவதை தியாகம் செய்த ஒரு மனிதருக்கு அவரை உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான மனிதராக மாற்றுவது தான் நான் செய்ய வேண்டிய விஷயம்.

View this post on Instagram

A post shared by Rahhul Sarath (@rahhul.sk)

சரத்குமார் பற்றி சொன்னது:

ஒவ்வொரு மகனும் ஏங்கும் அந்த தருணத்தை நான் அனுபவித்தேன். என்னுடைய தேர்வு முடிவுகள் வந்தது. முதல் வகுப்பு ஹானர்ஸுடனும், சிறப்பு மதிப்பெண்ணுடனும் தேர்ச்சி பெற்றேன். அதைப் பார்த்த என்னுடைய தந்தை முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை என்னால் வார்த்தைகளில் சொல்ல முடியாது. இந்த நாள் என்னுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியாக்கியது. என் டாடிப்பா, என் மிஸ்டர் மெட்ராஸ், நான் சொல்ல விரும்புவது ஒன்று தான், மிஸ்டர் வாசுதேவன் உங்கள் மகன் வெற்றி பெற்று விட்டான். லவ் யூ டாடிப்பா என்று கூறியிருக்கிறார்.

சரத்குமார் திரைப்பயணம்:

மேலும், கடந்த ஜுலை மாதம் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த படம் 3BHK. இந்த படத்தில் தேவயானி, சித்தார்த், மீதா, சைத்ரா ஜே. அச்சர் உட்பட பல சைத்ரா நடித்திருந்தார்கள். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பாக அருண் விஷ்வா இந்த படத்தை தயாரித்திருந்தார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை அடுத்து சரத்குமார் நடிப்பில் வெளிவந்த தெலுங்கு மொழியில் பிரபல நடிகர் விஷ்ணு மஞ்சு நடிப்பில் வெளிவந்த படம் கண்ணப்பா. இந்த படத்தில் பல நட்சத்திர பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மிக பெரிய அளவில் வரவேற்கப்பட்டது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full