இதை சாப்பிடுவதில் என்ன பிரச்சனை.! அட்வைஸ் செய்த நண்பரை மூக்குடைத்த ரைசா.!

By Rajkumar · 8/2/2019

கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு பிறகு அதிகம் பிரபலமடைந்தவர் ரைசா தான். மாடலிங் துறையில் இருந்த ரைசா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார்.  

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாக, விளம்பரங்கள், படங்கள் என்று வாய்ப்புக்கள் இவரை தேடி வந்தது. அதன் பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான வி ஐ பி- 2’ படத்தில் கூட கஜோலுக்கு உதவியாளராக நடித்திருந்தார். 

சமீபத்தில் இவரும் பிக் பாஸ் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் தற்போது ‘ஆலிஸ்’ என்ற படத்திலும் ஜிவி பிரகாஷுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். 

இந்நிலையில் நடிகை ரைசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டார். அதில் மீன் மற்றும் நண்டை தானே சமைத்ததாக குறிப்பிட்டிருந்தார். அதனை கண்ட அவரது நண்பர் நண்டை சாப்பிடுவது தனக்கு பிடிக்காது என்பது போல கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த ரைசா, உனக்கு பிடிக்காது இல்ல அப்புறம் என்ன என்பது போல அவரை முக்குடைத்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full