ஓவியாவை பிக் அப் செய்ய முயற்ச்சி செய்தார் வையாபுரி- புறம் பேசும் ரைசா

By Tamil Selvam · 21/8/2017
பிக்பாஸ் வீட்டில் நேற்று காயத்ரி வெளியவுடன் அவரது புரணி பேசும் பணியை ரைசா செய்துவருகிறார். பிக்பாஸ் இல்லத்தில் சுஜா உள்ளே வந்தபோது கணேஷ் அவருக்கு சில உதவிகள் செய்துவந்தார். அதனைக் கண்ட வையாபுரி ஆரவிடம் கிண்டலாக ‘கட்டிப்புடி..கட்டிப்புடிடா’ என்ற பாடலை பாடியதாக புகார் எழுந்தது. இது குறித்து சுஜா வையாபுரியிடம் முறையிட்டார். ஒரு கட்டத்தில் வையாபுரி அழுதவாறு எல்லாரிடமும் மன்னிப்பு கோரினார். இந்நிலையில், விஜய் தொலைக்காட்சி ஒரு புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், நடிகர் வையாபுரி பற்றி ஆரவிடம் ரைசா வத்தி வைக்கும் காட்சி ஒளிபரப்பானது. ரைசா கூறும்போது, ஒரு முறை செல்பி எடுத்த போது வையாபுரி ஒரு கதை சொன்னார். அதில், ஓவியா வை நான் பிக் அப் செய்ய முயற்சி செய்தேன். ஆனால், அவரை ஏற்கனவே பிக் -அப் பண்ணிட்டாங்கன்னு சொன்னார். இப்படி பேசுறவர் கண்டிப்பா சுஜாவை பற்றி பாட்டு பாடியிருப்பர். எனக்கு சந்தேகமே இல்லை எனக் கூறுகிறார். அதனை ஆமோதிக்கும் வகையில் ஆரவும் தலையை ஆட்டுகிறார். காயதிரி சென்றபின் அவரது பணியை ரைசா தொடர்கிறார் என்று ரசிகர்கள் கருதுகிறார்கள்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full