வர்மா படத்தில் இருந்த ரைசா ஆதித்யா வர்மாவின் இல்லை.! அவருக்கு பதில் இவர் தான்.!

By Rajkumar · 20/2/2019

தெலுங்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த படத்தைத் தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை ஈ4 தயாரிப்பு நிறுவனம் ரீமேக் செய்ய பாலா இயக்க விக்ரம் மகன் துருவ் நடித்து `வர்மா’ என்று பெயரிடப்பட்டு அந்தப் படம் தமிழில் முழுமையாக எடுக்கப்பட்டது.

கடந்த காதலர் தினத்தன்று வெளியாக இருந்த நிலையில், பாலா படத்தின் முழு படத்தை பார்த்த பட நிறுவனம் `படத்தின் ஃபைனல் வெர்ஷன் எங்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. ஒரிஜினலுக்கும் இதற்கும் இந்த படத்திற்கும் இயக்குநர் கதையில் சில மாற்றங்கள் செய்திருக்கிறார்.

அதனால் இதை வெளியிட எங்களுக்கு விருப்பமில்லை’ என அறிவித்து அதிர்ச்சியளித்தது. மேலும், துருவ் மீண்டும் கதாநாயகனாக நடிக்க வேறு ஒரு இயக்குனர் மற்றும் கதாநாயகியை வைத்து இந்த படத்தை முதலில் இருந்து தயாரிக்கபோவதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் 'ஆதித்யா வர்மா' என்று புதிய பெயரில் இந்த படத்தை அர்ஜுன் ரெட்டி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய கிரி சாயா இயக்குக்குகிறார். மேலும், புதுமுக நடிகை பனிதா சந்து என்பவர் கதாநாயகியாக கமிட் ஆகியுள்ளார். மேலும், வர்மா படத்தில் நடித்திருந்த பிக் பாஸ் ரைசா இந்த படத்தில் இல்லை அவருக்கு பதிலாக நடிகை பிரியா ஆனந்த் கமிட் ஆகியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full