கல்யாணம் உண்மை தான்,ஆனா - TTF வாசனுடனான திருமண செய்தி குறித்து ராஜா ராணி நடிகை.

By Arun · 13/7/2023

ராஜா ராணி சீரியல் நடிகையை டிடிஎஃப் வாசன் திருமணம் செய்ய இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சமூக வலைதளத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நபராக திகழ்பவர் டிடிஎஃப் வாசன். இவர் தன்னுடைய உயரக பைக்கில் வேகமாக செல்வது, அப்படி செல்லும் வழியில் இருக்கும் ஏழைகளுக்கு பணம் மற்றும் சாப்பாடு தொடர்பாக உதவி செய்வது என்று வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். இதனால் இவர் சீக்கிரமாகவே 2k கிட்ஸ்களின் மத்தியில் பிரபலமான நபராக இருக்கிறார்.

தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் நபர்களில் டிடிஎஃப் வாசனும் ஒருவர். இப்படி இவர் பிரபலமாக இருந்தாலும் வண்டியில் அதி வேகமாக சென்று பிறரை பயமுறுத்துவது, சாலை விதிகளை மீறி கூட்டத்திற்குள் செல்வது என்று வேலைகளை செய்து சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். இவர் இளைஞர்களுக்கு முன் உதாரணமாக மட்டுமில்லாமல் இப்படி இவர் செய்வதன் மூலம் பல இளைஞர்கள் தவறான பாதையில் செல்வார்கள் என்றெல்லாம் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றார்கள்.

டிடிஎஃப் வாசன் குறித்த தகவல்:

இப்படி இவர் குறித்து பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் இருந்தாலும் தற்போது இவர் சினிமாவில் நடிகராக அவதாரம் எடுத்திருக்கிறார். இவர் மஞ்சள் வீரன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகில் அறிமுகமாக இருக்கிறார். இந்த படம் கூடிய விரைவில் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் டிடிஎஃப் வாசன் தொலைக்காட்சி நடிகையை திருமணம் செய்து கொள்ள இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் வேற யாரும் இல்லைங்க, ராஜா ராணி நடிகை சங்கீதா தான்.

ராஜா ராணி 2 நடிகை:

இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் மீடியாவுக்குள் அறிமுகமானார். அதற்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த தொடர்களில் ஒன்றான ராஜா ராணி 2 சீரியலில் சரவணனின் கடைசி தம்பி ஆதியின் மனைவியாக ஜெசி என்ற கதாபாத்திரத்தில் சங்கீதா நடித்திருந்தார். இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சமீபத்தில் தான் இந்த சீரியல் முடிவடைந்தது. இந்த சீரியலின் மூலம் சங்கீதா அவர்கள் ரசிகர்கள் மத்தியில் தனக்கான ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.

டிடிஎஃப் வாசன்-சங்கீதா திருமணம்:

இப்படி இருக்கும் நிலையில் தான் சங்கீதாவிற்கும் டிடிஎஃப் வாசனுக்கும் திருமணம் நடைபெற இருக்கும் தகவலை சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார்கள். மேலும், சங்கீதா, திருமண பத்திரிகையை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். அதில் இவர்களுக்கு ஆகஸ்ட் 20ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக கூறியிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இவர்கள் திருமணம் குறித்து பலருமே பல சர்ச்சைகளை கிளப்பி இருக்கிறார்கள்.

https://www.youtube.com/watch?v=wIGjpLu-GCI&embeds_referring_euri=https%3A%2F%2Ftamilglitz.in%2F&source_ve_path=MjM4NTE&feature=emb_title

வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்:

இதற்கு விளக்கம் கொடுத்து சங்கீதா வீடியோ ஒன்றையும் பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர், இதுதான் எங்களுடைய திருமண பத்திரிக்கை. எங்களுக்கு திருமணம் நடைபெறுவது உண்மைதான். தேவையில்லாமல் புரளியை பரப்பாதீர்கள். உங்களுடைய அன்புக்கு நன்றி என்று கூறியிருந்தார். தற்போது வாசன், சங்கீதாவின் திருமண பத்திரிக்கை தான் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full