என் புகைப்படத்தை பேப்பரில் பார்த்து ஷாக் ஆகிட்டேன்.! ரித்திகாவிற்கு ஏற்பட்ட சோகம்.!

By Rajkumar · 17/5/2019

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமான ஒரு தொடராகும். இந்த தொடரில் சஞ்சீவ் மற்றும் மானஸவிற்குா அடுத்து ரசிகர்கள் மத்தியில் பரபலமாக இருப்பது ரித்திகா தான்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ரித்திகா வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு வந்த இளைஞர், “நான் கோபிச்செட்டிபாளையத்தில் இருந்து வருகிறேன். எனக்கு ரித்திகாவை மிகவும் பிடிக்கும். சீரியலில் பார்த்து அவரை காதலிக்கிறேன். . அவரை திருமணம் செய்து வையுங்கள்” என்று ஒரு இளைஞர் ரகளையில் ஈடுபட்டார்.

நான் கொஞ்சம்கூட இந்த விஷயத்தில் சம்பந்தப்படலை. அந்தப் பையன் என்னைத் தேடிப்போன இடம் வேற, பார்த்த ஆளுங்களும் வேற! அவர் மனரீதியாக ஏதோ பிரச்னை உள்ள நபர்னு பேப்பரில் குறிப்பிட்டிருந்தாங்க. என் புகைப்படத்தைப் பேப்பரில் பார்த்ததும் ஷாக் ஆகிட்டேன். ஒரு பத்திரிகையாளர் என்னைத் தொடர்புகொண்டு இந்தப் பிரச்னை குறித்துக் கேட்டார்.

அதுமட்டுமல்லாமல், வடபழனி காவல் நிலையத்தில் பதியப்பட்டிருந்த கேஸ் குறித்தும் சொன்னார். அவர் சொன்னதுக்கு அப்புறம்தான் போலீஸ் ஸ்டேஷனில் அந்தப் பையன் என் போட்டோவை காட்டியிருக்கிறார் என்பதும், அவர் வேறு ஒரு இடத்துக்குப் போயிருக்கார் என்பதும் தெரிஞ்சது. இது நான் சம்பந்தப்படாத விஷயம் என்பதால் இந்தப் பிரச்னையை ஈஸியா கடந்துட்டேன். 

Tamil Behind Talkies AMP · Quick view
View full