உங்க அக்கறை எனக்கு தேவையில்லை - குழந்தை குறித்து அட்வைஸ். கடுப்பான ராஜா ராணி சீரியல் நடிகை.
தமிழில் பல்வேறு சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகள் மத்தியில் இடம்பிடித்தவர் ஸ்ரீதேவி. தனுஷ் நடித்த ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்தின் மூலம் தான் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். அதன் பின்னர் தமிழில் ‘கஸ்தூரி’, ‘இளவரசி’, ‘வாணி ராணி’ என 20-க்கும் மேற்பட்ட சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.இவர் தற்போது சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பூவே உனக்காக’ மற்றும் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘காற்றுக்கென்ன வேலி’ போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார்.
ராஜா ராணி' சீரியலில் கொடூரமான வில்லியாக, பார்ப்பவர்களின் கண்களில் கத்திரி வெயிலைக் கடத்திக்கொண்டிருந்தவர், ஶ்ரீதேவி. ஆனால், நிஜத்தில் இவர் மார்கழி மாத அதிகாலைபோல செம கூல், பயங்கர ஜாலி டைப். செல்லப் பிராணிகளின் காதலியான ஶ்ரீதேவிக்கு, அவரைப்போலவே செல்லப் பிராணி காதலரான அசோக் சிந்தாலா என்பவருடன் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இதையும் பாருங்க : ஒருநாளைக்கு எத்தன சிகரெட் புடிப்பீங்க - ரசிகரின் கேள்விக்கு ராஷ்மிகா பதில்.
தனது கணவர் குறித்து பேசிய ஸ்ரீதேவி, என் கணவர் அசோக் சிந்தாலா, பெங்களூரில் ஒரு ஐ.டி கம்பெனியில் வேலைபார்க்கிறார். அவருக்கு புகைப்படங்கள் எடுப்பது பிடிக்கும். குறிப்பாக, பெட் Pet போட்டோகிராஃபி கைவந்த கலை. அவ்வளவு அழகாக எடுப்பார். நம்மூரில் பெட் போட்டோகிராஃபர்கள் குறைந்த அளவே இருக்காங்க. இவருடைய புகைப்படங்களைப் பார்த்து, என் பெட்ஸை போட்டோ எடுக்கணும்னு பேசினேன். அப்படித்தான் எங்களுடைய நட்பு ஆரம்பிச்சது என்று கூறி இருந்தார் ஸ்ரீதேவி.
கடந்த சில மாதங்களாக ஸ்ரீதேவி கர்ப்பமாக இருந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் குழந்தை பிறந்தது. தனது குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஸ்ரீதேவி பகிர்ந்துள்ள போது சிலர் செய்த கமெண்டால் கடுப்பாகி இருக்கும் ஸ்ரீதேவி, என் கணவருடன் புகைப்படம் போட்டக் கூடாது, குழந்தையுடன் புகைப்படம் போடக் கூடாது, சந்தோசமா இருக்கும் போடக் கூடாது என்று சொல்பவர் அனைவரையும் பிளாக் செய்துவிட்டேன், உங்கள் நெகடிவ் அக்கறை தேவையில்லை இனி நான் என் பதிவிடுகிறேன் என்ற கவலை உங்களுக்கு இருக்காது என்று கூறியுள்ளார்.