அட்ரஸ சொல்லு, உன் சாம்பல் கூட - 'விண்ணுக்கும் மண்ணுக்கும்' படத்தின் போது இயக்குனர் ராஜகுமாரனை மிரட்டிய சரத்
சரத்குமார் தன்னை மிரட்டியதாக இயக்குனர் ராஜகுமாரன் தனது பழைய பேட்டியில் கூறி இருந்த விஷயம் தான் தற்போது மீண்டும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான இயக்குனராக திகழ்ந்தவர் ராஜகுமாரன். இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் 1999 ஆம் ஆண்டு வெளிவந்திருந்த 'நீ வருவாய் என' என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து இவர் பல படங்களை இயக்கியும், நடித்தும் இருக்கிறார். மேலும், இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இதனிடையே இயக்குனர் ராஜகுமாரன் அவர்கள் நடிகை தேவயானியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதுமட்டுமில்லாமல் நடிகை தேவயானியை திரை உலகிற்கு அறிமுகப்படுத்தியதே ராஜகுமாரன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜகுமாரன் பேட்டி:
இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில், ராஜகுமாரன் தான் இயக்கிய ' விண்ணுக்கும் மண்ணுக்கும்' படத்தின் போது தனக்கும் சரத்குமாருக்கும் நடந்த கசப்பான விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், சரத் சாருக்கும் எனக்கும் 'விண்ணுக்கும் மண்ணுக்கும்' படத்தின் அப்போ பெரிய சண்டை வந்துடுச்சு. அதாவது அவருக்கு அந்தப் படத்துல 20 நாட்கள் டேட்ஸ், 48 லட்சம் சம்பளம். ஆனால், அவர் படம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே 40 லட்சம் வாங்கிட்டாரு போல இருக்கு. அதுக்கு அப்புறமும் அவருக்கு பணம் தேவைப்பட்டதால ஒரு 10 லட்சம் மட்டும் சேர்த்து குடுங்க என்று கேட்டார். ஆனால், கம்பெனில ஒத்துக்கொள்ளவில்லை.
படத்தை நிறுத்த சொன்ன சௌத்ரி:
அதனால் அவரை இந்த படம் விண்ணுக்கு இல்லை மண்ணுக்கு தான் என்று சொல்லிட்டாரு.
சரத்குமார் சார் பத்தின இந்த விஷத்தை நான் சொல்ல கூடாது. இருந்தாலும் நான் சொல்கிறேன். ஏனென்றால், எனக்கு அவர் பிடித்த நடிகர்.' விண்ணுக்கும் மண்ணுக்கும்' படத்தின் ஷூட்டிங் நாலாவது நாள் ஏவிஎம்ல நடந்துட்டு இருக்கு. அப்போ சௌத்ரி சார் வந்து, இந்த படத்தை நிறுத்திடு இதற்கு மேல் இந்த படம் நடக்காது என்று சொன்னார். நான் ஏன் என்று கேட்டதற்கு, எல்லா சம்பளமும் கொடுத்த பிறகும் தினமும் வந்து சம்பளம் சம்பளம் என்று கேட்டு நிற்கிறார்கள். என்னால முடியாது இந்த படத்தை நீ க்ளோஸ் பண்ணிடு என்றார்.
பாதியில் நின்ற சரத்:
என்கிட்ட இருக்கிற ஒரு விஷயம் என்ன என்றால் ஒரு படத்தை ஸ்டார்ட் பண்ண கூடாது. அப்படி ஸ்டார்ட் பண்ணிட்டால் யாராலயும் நிறுத்த முடியாது. என்ன பிரச்சனை என்று கேட்டவுடனே, சரத் சார் சம்பளம் பற்றி சொன்னாரு. அதை நான் பார்த்துக்கிறேன் சார். அவர் கூட நான் அசிஸ்டன்டாக வேலை செய்து இருக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். சௌத்ரி சார் சொல்லிய பின் நான் 17 நாள் சூட்டிங் அந்த செட்டில் எடுத்துட்டேன். அதற்கு பிறகு 12 நாளில் அந்த செட்டை பிரிக்க போறாங்கன்னு சொன்னாங்க .அப்போ வந்து திடீர்னு நான் இதுக்கு அப்புறம் வரமாட்டேன் என்று சொல்லிட்டு சரத் சார் போயிட்டாரு என்று சொன்னாங்க. அப்பதான் சௌத்ரி சார் நான் அப்போதே சொன்னேன் நீ தான் கேட்கவில்லை என்றார்.
மிரட்டிய சரத்:
அதற்குப் பிறகு அவர் கிட்ட நான் அவருடைய சீன் எல்லாமே எடுத்து முடிச்சிட்டேன் என்று சொன்னேன். அவர் என்கிட்ட என்னய்யா சொல்ற என்று கேட்டதற்கு, அவரை வைத்து இன்னும் ரெண்டு நாளைக்கு ரெண்டு சீனு, அப்புறம் ஒரே ஒரு நாளுக்கு ஒரு பைட் சீன் மட்டும் இருக்கு. அவர் இல்லாம கூட அதை முடிச்சுபேன் என்று சொன்னேன். அதே மாதிரி டப்பிங் லிங்குசாமியை வைத்து செய்திடுவேன் என்று சொன்னேன். அப்புறம் அவர் இல்லாமே அந்த காட்சிகள் எடுத்த பிறகு சரத் சார் எனக்கு போன் செய்து, நான் இல்லாமல் என்னுடைய காட்சிகள் எப்படி நீ எடுக்கலாம். உன் அட்ரஸ் சொல்லு உன்னுடைய சாம்பல் கூட தமிழ்நாட்டுல இருக்காது என்று மிரட்டினார் என்று கூறியுள்ளார்.