40 வருட சினிமாவுல 40 லட்சம் கூட சம்பாதிக்கல - ஆதங்கத்தில் இயக்குநர் ராஜகுமாரன் சொன்னது

By subhashini · 8/9/2025

நடிகை தேவயானியின் கணவர் இயக்குனர் ராஜகுமாரன் புதிதாக பிசினஸ் தொடங்கி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான இயக்குனராக திகழ்ந்தவர் ராஜகுமாரன். இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் 1999 ஆம் ஆண்டு வெளிவந்திருந்த ‘நீ வருவாய் என’ என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களை இயக்கியும், நடித்தும் இருக்கிறார்.

மேலும், இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இதனிடையே இயக்குனர் ராஜகுமாரன் அவர்கள் நடிகை தேவயானியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதுமட்டுமில்லாமல் நடிகை தேவயானியை திரை உலகிற்கு அறிமுகப்படுத்தியதே ராஜகுமாரன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 90ஸ் காலகட்டத்தில் சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் தேவயானி. இவர் தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

ராஜகுமாரன் குறித்த தகவல்:

தேவயானியும், இயக்குனர் ராஜகுமாரனும் காதலித்து திருமணம் தேவயானியும், கொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள். தற்போது தேவயானி பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். வெள்ளித்திரை மட்டுமில்லாமல் இவர் சின்ன திரையிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் இயக்குனர் ராஜகுமாரன் அவர்கள் சினிமாவில் பெரிய அளவில் புகழ்பெறவில்லை என்றாலும் வாழ்க்கையில் வெற்றி பெற்று மதிக்கமிக்க மனிதராகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ராஜகுமாரன் புது பிசினஸ்:

இப்படி இருக்கும் நிலையில் இயக்குனர் ராஜகுமாரன் அவர்கள் புதிதாக பிசினஸ் தொடங்கி இருக்கிறார். அதாவது, இவர் தான் சொந்தமாக வளர்க்கும் செடிகளில் இருந்து 100% இயற்கை முறையில் அழகு சாதன பொருட்களை உருவாக்கி ஹிமாயா நேச்சுரல்ஸ் என்ற பெயரில் ஸ்டால் ஒன்று போட்டு இருக்கிறார். பின் இது தொடர்பாக அளித்த பேட்டியில் இயக்குனர் ராஜகுமாரன், 40 வருடங்களுக்கு முன்பு நான் ஒரு கிராமத்தில் இருந்து சினிமா கனவோடு சென்னைக்கு வந்தேன். பல பேர் என்னை கிண்டல் கேலி எல்லாம் செய்து இருக்கிறார்கள். சென்னையில் குடிக்க கூட தண்ணி இல்லை நீ தண்ணி இல்லாமல் தான் சாவ போகிறாய் என்றெல்லாம் கேலி செய்திருக்கிறார்கள்.

ராஜகுமாரன் பேட்டி:

எப்போதும் நான் முன்னோடியாக இருக்கிறேன். நான் இயற்கை முறையில் அழகு சாதன பொருட்களை தயாரித்து விற்கிறேன். காரணம், தொழில் செய்வதற்கு நிறைய வழிகள் இருக்கிறது. ஆனால், ஒரு உண்மையான கலப்படம் அற்ற சுத்தமான பொருள் கிடைப்பதற்கு நிறைய பேர் தவம் இருக்கிறார்கள். அந்த மாதிரியான ஒரு பொருளை கொடுக்கத்தான் நான் இந்த தொழிலை எடுத்து இருக்கிறேன். பொருளாதார நோக்கத்திற்காக நான் எதையும் செய்யவில்லை. நான் இந்த சினிமா துறையில் நுழைந்து 40 வருடங்கள் ஆகிவிட்டது. வருடத்திற்கு ஒரு லட்சம் என்று கணக்கு போட்டால் கூட நான் 40 லட்சம் ரூபாய் சம்பாதித்தது கிடையாது. நான் என்னைக்குமே பொருளாதார நோக்கில் பார்த்ததே கிடையாது என்று கூறியிருக்கிறார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full