அக்கா அணிந்த அதே மாடர்ன் டிரஸ்ஸில் தங்கை - அட, இந்த தமிழ் நடிகைகல் இருவரும் இந்த நடிகரின் மகள்களா.

By Manikandan · 27/2/2023

90ஸ் கிட்ஸ்களின் அப்பாக்கள் காலத்தில் மிகவும் பிரபலமான ஒரு நடிகை ஜீவிதா. இவர் தமிழில் 1984ஆம் ஆண்டு டி. ஆர் இயக்கத்தில் வெளியான "உறவுகாத்தக் கிளி " என்ற படத்தின் மூலம் அறிவுமாகமானார். 80 ஹீரோக்களான விஜயகாந்த, ராமராஜன், அர்ஜுன் போன்ற நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் 1986 ஆம் ஆண்டு கவுண்டமணி கதாநாயகனாக நடித்த"பிறந்தேன் வளர்ந்தேன் " என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

பின்னர் 1991 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு பின் இவர்களுக்கு ஷிவானி மற்றும் ஷவாத்மிகா என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் சினிமாத்துறையில் பிரபல நடிகைகளாக உள்ளனர். இந்த நிலையில் தான் அக்கா தங்கயான இவர்கள் இரண்டு பேரும் ஒரே நேரத்தில் தங்களது சோசியல் மீடியாக்களில் பதிவிட்டிருக்கும் புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷிவானி :

ஷிவானி மற்றும் ஷவாத்மிகா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்து வருகின்றனர். தமிழில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வெளியான "அன்பறிவு" என்ற படத்தில் ஷிவானி சமீபத்தில் நடித்திருந்தார். அதேபோல அமைச்சர் உதயநிதி நடித்திருந்த "நெஞ்சுக்கு நீதி" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் ஆஹா நா பெல்லண்டா என்ற தெலுங்கு இணைய தொடரிலும், வித்யா வஸுல அஹம் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.

View this post on Instagram

A post shared by Shivani Rajashekar (@shivani_rajashekar1)

ஷிவாத்மிகா :

இந்நிலையில் இவரது தங்கை ஷிவாத்மிகா தெலுங்கு சினிமாவில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான "டொரசனி" என்ற படத்தில் அறிமுகமாகினார். சமீபத்தில் கூட இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்தி நடித்த "ஆனந்தம் விளையாடும் வீடு" என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். பின்னர் நித்தம் ஒரு வானம், பட்சதந்திரம் போன்ற படங்களில் நடித்திருந்தார். மேலும் "ரங்க மார்த்தாண்ட" மற்றும் "வித்யா வஸுல" அஹம் என்ற இரண்டு படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

View this post on Instagram

A post shared by Shivathmika Rajashekar (@shivathmikar)

வைரல் புகைப்படங்கள் :

இந்நிலையில் தான் ஷிவானியும், ஷிவாத்மிகவும் போட்டி போட்டு கொண்டு தங்களுடைய சோசியல் மீடியா பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அக்கா, தங்கை இருவரும் ஒரே நிறமுடைய மற்றும் வடிவமுடைய உடையில் புகைப்படம், எடுத்துக்கொண்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full