விஜய்யை கைது செய்ய வேண்டும், பணம் கொடுத்து அப்படி செய்ய வைக்கிறார் - ராஜேஷ்வரி பிரியா பரபரப்பு புகார்.

By Manikandan · 7/7/2023

தமிழ் சினிமாவில் தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுவர் விஜய். இவர் நடிப்பில் வெளியான அணைத்து படங்களுமே பெரிய அளவில் ஹிட் அடித்திருக்கிறது. விமர்சனம் ரீதியாக அடி வாங்கினாலும் வசூல் ரீதியில் எப்போதுமே வெற்றி பெற்று வருகிறது. இந்நிலையில் விஜய் தற்போது தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் லீயோ படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படம் LCU யூனிவர்சிற்குல் வரும் என்று கூறப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதனிடையே தான் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "நா ரெடி" பாடலானது கடந்த ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளன்று வெளியானது. இந்த பாடலை விஜய்யே பாடியிருந்தார், இதனால் பாடல் வெளியான போது யூடியூபில் ட்ரெண்டாகி இருந்தது. ஆனால் இந்த பாடலில் புகைபிடிக்கும் படியான கட்சிகளும், மது அருந்துவதை பற்றிய வாசகங்களும் இடம்பெற்றிருந்தது சமூக ஆர்வலர்கள் இடையே பெரும் எதிர்ப்பை உருவாக்கியது.

நா ரெடி பாடல் மீதான விமர்சனம் :

மேலும் பாமாக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களும் விஜய் இந்த மாதிரியாக விஜய் புகைபிடுக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த விமர்சனங்களை தொடர்ந்து "நா ரெடி" பாடலில் மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு என்ற வாசகத்தை இடம்பெற செய்தனர் படக்குழுவினர். இந்நிலையில் அனைத்து மக்கள் கட்சி தலைவர் ராஜேஷ்வரி பிரியா விஜய் மீது நடக்கடிக்கை எடுக்க எடுக்க கோரி புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜேஷ்வரி பிரியா புகார் :

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் "விஜய்க்கு 2 வயது சிறு குழந்தைகள் முதல் ரசிகர்களாக இருக்கின்றனர். அப்படியொரு நிலையில் விஜய் சிகரெட் பிடிப்பதை 3 வயது சிறுவன் பார்க்கும் போது தானும் பெரியாளாகி அதனை அவரை போல சிகரெட் குடித்தால் என்ன என்ன நினைத்தால் என்ன செய்ய முடியும், யாராவதினால் தடுக்க முடியுமா?சினிமாவிற்கு தேவைக்கு என்றால் ஆக்டோபர் மாதம் அந்த படத்தை வெளியிட்டிருக்கலாம்.

விஜய்யை கைது செய்ய வேண்டும் :

ஆனால் அப்படம் வெளியாவதற்கு முன்னதாக பாடலை வெளியிட்டீர்கள். இங்கே 53 சதவிகிதம் பேர் புகைபிடிப்பதற்கு சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் தான் காரணம் என்றார் ராஜேஷ் பிரியா. மேலும் இந்த தகவலை தான் சோசியல் மீடியாவில் வெளியிட்ட போது தன்னை ஆபாசமாகவும், அச்சுறுத்தும் வகையிலும் திட்டி பதிவிட்டதாக அவர் தெரிவித்தார். மேலும் அப்படி அவர்கள் கமெண்ட் செய்ய விஜய் தான் பணம் கொடுக்கிறார் என்றும் அவரை கைது செய்ய வேண்டும் என்ற அணைத்து மக்கள் கட்சி தலைவர் ராஜேஷ்வரி பிரியா கூறியது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் இவர் விஜய்யின் "நா ரெடி" பாடல் "மது உடல் நலத்திற்கு கேடு" என்ற வாசகம் இல்லாமல் வெளியானது குறித்தும், பாடலால் இடம்பெற்றுள்ள சில வாசகங்கள் குறித்தும் அவர் கொடுத்திருந்த புகாரில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ராஜேஷ் பிரியா போட்டுள்ள பதவு தற்போது வைரலாகி வருகிறது. இதனிடையே LEO படத்தின் வேலைகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி இப்படமானது வெளியாக இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full