நயனா, கீர்த்தியா.! யார் ரஜினி 166 படத்தின் கதாநாயகி.! ரஜினி PRO அதிகாரபூர்வ தகவல்.!

By Rajkumar · 28/2/2019

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘சர்கார்’ திரைப்படத்திற்கு பின்னர், நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒரு படத்தை எடுக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் செய்திகள் கடந்த சில மாதமாக அடிபட்டு வரும் நிலையில் இன்னும் இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருக்கிறது. 

இந்த படத்திற்கு நாற்காலி என்று பெயர் வைக்கப்பட்டதாகவும், இந்த படமும் சர்கார் போன்று அரசியல் சார்ந்த படமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற முருகதாஸ் இந்த படம் தனது முந்தய படமான ‘சர்கார்’ போன்று அரசியல் சம்மந்தபட்ட கதையாக இருக்காது என்று விளக்கமளித்தார்.

ஆனால், இதுவரை இந்தப் படத்தைப் பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை இந்த நிலையில் இந்த படத்தில் நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக கடந்த சில நாட்களாக சமூக வளைத்தளத்தில் ஒரு செய்தி வைரலாக பரவி வந்தது.ஆனால், தகவலை மறுத்துள்ளார் ரஜினியின் பி ஆர் ஓ.

இதுகுறித்து ரஜினிகாந்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாக உள்ள ரியாஸ் கே அமீது அவரிடம் கேட்டபோது. தற்போது இந்த படம் உறுதியாவது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.ஆனால், மற்ற விவரங்கள் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. அடுத்த மாதம் இந்த படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் அதுவரை இந்த ஆதாரமற்ற வதந்திகளை எல்லாம் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full