ரஜினி சார் படத்தில் பணியாற்ற போகிறேன்.! இவர் தான் ரஜினி 166 படத்தின் இசையமைப்பாளராம்.!

By Rajkumar · 27/2/2019

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘சர்கார்’ திரைப்படத்திற்கு பின்னர், நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒரு படத்தை எடுக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் செய்திகள் பல நாட்களாக அடிபட்டு வரும் நிலையில் இன்னும் இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருக்கிறது. 

இந்த படத்திற்கு நாற்காலி என்று பெயர் வைக்கப்பட்டதாகவும், இந்த படமும் சர்கார் போன்று அரசியல் சார்ந்த படமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற முருகதாஸ் இந்த படம் தனது முந்தய படமான ‘சர்கார்’ போன்று அரசியல் சம்மந்தபட்ட கதையாக இருக்காது என்று விளக்கமளித்தார். 

மேலும், இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் படத்தில் இடம்பெறும் அம்சங்கள் அனைத்தும் இருக்கும் என்றும் முருகதாஸ் என்று கூறியிருந்தார். ஆனால், படத்தில் பணிபுரியும் கலைஞர்கள் பற்றி எந்த ஒரு தகவலையும் அவர் கூறவில்லை. இந்த நிலையில் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

அதனை தற்போது அனிருத்தும் உறுதிபடுத்தியுள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அனிருத். பேட்ட படத்தில் தலைவர் படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. பேட்டயை தொடர்ந்து மீண்டும் ரஜினி சார் படத்தில் பணியாற்ற போகிறேன் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full