நெல்சனை தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கு சூர்யா பட இயக்குனரை தட்டி தூக்கிய ரஜினி - அதிகாரபிபூர்வ அறிவிப்பை வெளியிட்ட லைகா.

By Siva · 2/3/2023

ரஜினி நடிக்கும் 170 படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் ரஜினிகாந்த் தன்னுடைய திரை பயணத்தில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த ரஜினிகாந்த் கடந்த சில வருடங்களாக ஹிட் படத்தை கொடுக்க போராடி வருகிறார். இறுதியாக சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த பேட்ட, தர்பார், அண்ணாத்த ஆகிய மூன்று திரைப்படங்களும் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. அதிலும் இறுதியாக வெளியான தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய இரண்டு திரைப்படங்களும் மாபெரும் தோல்வியை தழுவியது.

தற்போது ஒரு ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என்ற ஒத்மையாக இருக்கும் ரஜினி இளம் இயக்குனர்களுடன் கைகோர்க்க தயாரானார் அந்த வகையில் தற்போது ரஜினியின் அடுத்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை யார் இயக்கப் போவது என்ற மிகப்பெரிய கேள்வி சினிமா வட்டாரத்தில் பேசு பொருளாகவே இருந்தது.

ரஜினியின் 170வது படத்தை  லோகேஷ் கனகராஜ் இணைவதாகவும் தகவல்கள் அடிபட்டன. இப்படி ஒரு நிலையில்  லைகா நிறுவனம் தற்போது ரஜினியின் 170வது படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது. ரஜினி 170வது படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட லைகா : -

லைகா குழுமத் தலைவர் திரு. சுபாஸ்கரன் அவர்கள் பிறந்தநாளில் "சூப்பர் ஸ்டார்" திரு. ரஜினிகாந்த் அவர்களின் "#தலைவர் 170" திரைப்படத்தின் அறிவிப்பை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மற்றுமொரு பெருமைமிகு தருணம் இது. தலைமுறைகள் கடந்து திரை ரசிகர்களை மகிழ்வித்து மகிழ்கின்ற "சூப்பர் ஸ்டார்" திரு.ரஜினிகாந்த் அவர்களின் "#தலைவர் 170" திரைப்படத்தின் பணிகள் இனிதே ஆரம்பம்.

இயக்குநர் திரு.த.செ.ஞானவேல் இயக்கத்தில், இசைவழி நம் இதயங்களை இணைக்கும் திரு. அனிருத் இசையில், பிரம்மாண்டமான திரைப்படங்களைப் படைத்தளிக்கும் திரு. சுபாஸ்கரன் தயாரிப்பில், லைகா புரொடக்ஷன்ஸ் தலைமைப் பொறுப்பாளர் திரு. ஜி.கே.எம். தமிழ் குமரன் அவர்களின் தலைமையில், "#தலைவர் 170" திரைப்படம் 2024-ம் ஆண்டு திரைக்கு வரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

சூப்பர் ஸ்டார் அவர்களின் ஒவ்வொரு திரைப்பட வெளியீடும், ரசிகர்கள் கொண்டாடும் திருவிழாதான். அவருடன் மீண்டும் இணைவதில் லைகா புரொடக்ஷன்ஸ் பெருமிதம் கொள்கிறது. அனைவரின் வாழ்த்துகளோடு 2024-ல் மாபெரும் கொண்டாட்டத்திற்குத் தயாராவோம். நன்றி" என்று கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full