கோமாளி படத்தில் அவரை கிண்டல் செய்து வைக்கப்பட்டட வசனம் குறித்து என்னிடம் ரஜினி சார் இதான் சொன்னார் - பிரதீப் சொன்ன விஷயம்.

By Rajkumar · 18/11/2022

கோமாளி படத்தில் ரஜினியை கலாய்த்து குறித்து ரஜினியே சொன்ன விஷயம் பற்றி லவ் டுடே பட இயக்குனர் பேசி இருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் லவ் டுடே. இந்த படத்தில் பிரதீப் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, விஜய் வரதராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

https://twitter.com/pradeeponelife/status/1591378038503374848

தான் ஹீரோவாக நடித்த முதல் படம் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தாலும் கடந்த சில தினங்களாக தன்னுடைய பழைய பதிவுகளால் சர்ச்சையில் சிக்கி வருகிறார் பிரதீப். இதனால் பல ட்ரோல்களை சந்தித்து வரும் பிரதீப்பிற்கு ரஜினியிடம் இருந்து வந்த பாராட்டு பெரும் ஆறுதலாய் அமைந்தது. சமீபத்தில் இந்த படத்தை பார்த்துள்ள ரஜினி, பிரதீப்பை போனில் தொடர்பு கொண்டு பாராட்டி இருக்கிறது. அது போக பிரதீப்பை நேரில் அழைத்து அவரை பாராட்டி இருக்கிறார். ரஜினியை சந்தித்த போது எடுத்த அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பகத்தில் பகிர்ந்து இருந்தார் பிரதீப்.

அதில் 'இதைவிட நான் என்ன கேட்க முடியும். சூரியனுக்கு அருகில் இருப்பதுபோல் இருந்தது. அவ்வளவு சூடு. இறுக்கமான அணைப்பு, அந்தக் கண்கள் , சிரிப்பு , நடை மற்றும் அன்பு. ரஜினிகாந்த் சார் லவ் டுடே பார்த்து என்னை வாழ்த்தினர். நீங்க சொன்ன வார்த்தைகளை எப்போதும் மறக்கமாட்டேன் சார்". இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரதீப் கோமாளி படத்தில் ரஜினியை கேலி செய்ததது குறித்து ரஜினியே கேட்டதாக கூறி உள்ளார்.

https://twitter.com/pradeeponelife/status/1158350225683222528

கோமாளி படத்தின் ஒரு காட்சியில் கோமாவில் இருந்து ஜெயம் ரவி எழும் போது இது எந்த வருடம் என்று யோகி பாபுவிடம் கேட்பார் அதற்கு யோகி பாபு 'இது 2016 என்று கூறுவார். அதன் பின்னர் டிவியில் ரஜினி 'நான் அரசியலுக்கு வருவது உறுதி' என்று பேசும் வீடியோவை யோகி பாபு போட்டு காண்பிப்பார். அதை பார்த்து ஜெயம் ரவி 'இது 96, யார ஏமாத்துறீங்க என்று சொல்வார்'' இந்த காட்சியை ட்ரைலரில் பார்த்த போதே ரஜினி ரசிகர்கள் பலர் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ரஜினி பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார் ஆனால், வரமாட்றார் என்று பலர் அந்த சமயத்தில் கேலி செய்து வந்தனர். அதனால் இந்த காட்சியும் ரஜினியை கேலி செய்வது போலவே இருக்கிறது என்று ரஜினி ரசிகர்கள் பலர் திட்டி தீர்க்க இந்த படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேசனுடன் சேர்ந்து பிரதீப் விளக்க வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த விவகாரம் குறித்து ரஜினியை சந்தித்த போது அவர் சொன்ன விஷயம் குறித்து பேசி இருக்கிறார் பிரதீப்

https://twitter.com/senthan_msd/status/1593277892833574912

அதில் 'என்னை அவர் பொன்னாடை எல்லாம் போற்றி அருமையாக வரவேற்றார் மேலும் நிறைய படங்களை பற்றி பேசி இருந்தார் அவர் பல விஷயங்களை மிகத் துல்லியமாக கவனித்து இருக்கிறார் அதுவே எனக்கு பெரிய ஆச்சரியமாக இருந்தது போன படத்தில் நம்மளை கலாய்ச்சிங்க இல்ல என்று கூறி எல்லாம் Fun தான் என்று சொன்னார்.அவருக்கு எது குறிக்கோளுடன் செய்கிறோம் எது funகாக செய்கிறோம் என்பது தெரியும். அந்த காட்சியை நாங்கள் funகாக தான வைத்தோம். அந்தப் படத்தின் டிரைலர் வெளியான போதே ஐசரி கணேசன் சாரிடம் இது குறித்து ரஜினி சார் பேசியபோது படம் வேறு அரசியல் வேறு என்று சொன்னதாக அவர் என்னிடம் சொன்னார்' என்று கூறியுள்ளார் பிரதீப்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full