ராமர் கோவில் குறித்து தலீவர் அன்று சொன்னது - ரஜினி இயக்கிய வள்ளி பட காட்சியை பகிர்ந்த ப்ளூ சட்டை.

By Siva · 24/8/2023

ராமர் கோவில் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தான் இயக்கிய வள்ளி படத்தில் பேசிய வசனத்தை தற்போது பகிர்ந்து இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’ இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என்று யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார்.நடிகர்கள் முதல் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் என யாரையும் விட்டுவைக்காமல் விமர்சித்து இருக்கிறார். மேலும், இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது.

ஆனால், இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர். இவர் விமர்சகர் என்று சொல்லிக்கொண்டு திரைப்படங்களை சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்து வருகிறார். இதனால் இவரை ரசிகர்கள் பலரும் கழுவி ஊற்றி இருக்கின்றன. அந்த வகையில் இவர் ரஜினியை அடிக்கடி வம்பிழுத்து வருகிறார்.

அண்ணத்த படத்தின் போது ப்ளூ சட்டை மாறன் படத்தை மட்டுமல்லாது ரஜினியையும் படு மோசமாக விமர்சித்து இருந்தார். அப்போது இருந்து இவருக்கு ரஜினி ரசிகர்களுக்கும் ட்விட்டரில் அடிக்கடி கமண்ட் போர் சென்று கொண்டு தான் இருக்கிறது. இது இறுதியில் கொலை மிரட்டல் வரை சென்றது.ஆனாலும், ரஜினியை இவர் விமர்சித்து வருவதை விட்ட பாடில்லை. இப்படி ஒரு நிலையில் ரஜினி உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்த வீடியோவை பகிர்ந்து தொடர்ந்து கேலி செய்து வருகிறார். ஜெயிலர் திரைப்படம் ரஜினிக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்துள்ளது.

இந்த படம் 500 கோடி வசூலை நெருங்கி கொண்டு இருக்கிறது. இதனால் ஜெயிலர் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது. அதோடு படம் வெளியான உடனே ரஜினி அவர்கள் இமயமலைக்கு சென்று விட்டார். அங்கே பல ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று தரிசனம் செய்தும், பல்வேறு அரசியல் தலைவர்களையும் சந்தித்தும் இருந்தார் ரஜினி.

லக்னோவில் உள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை 9 ஆண்டுகளுக்கு பின் நேரில் சந்தித்து பேசி ரஜினி அதனை தொடர்ந்து அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு சென்றார். அத்துடன் அங்கு அவர்கள் கோவில் கட்டுமானப் பணிகள் முடியும்வரை மக்கள் வழி பட வைத்துள்ள ‘ராம்லல்லா’ சிலையையும் வழிபட்டனர். சாமி தரிசனம் முடித்த பின் அங்கு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி காந்த் செய்தியாளர்களிடம் “இது என்னுடைய நீண்ட நாள் கனவு” என்றும் “நாம் மிகவும் அதிர்ஷ்டசாலி” என்றும் கூறினார்.

அப்போது ராமர் கோவில் கட்டபடுவது குறிந்து உங்களுடைய பார்வை என்ன வென்று கேட்ட போது அதற்க்கு வரலாறு என்று பதிலளித்தார். மேலும் கோவில் கட்டி முடித்த பின் அது எவ்வாறு மாற்றப்படும் என்று பாருங்கள் என்றும் பதிலளித்துள்ளார்.இப்படி ஒரு நிலையில் ராமர் கோவில் குறித்து ரஜினி இயக்கிய வள்ளி படத்தில் இடம்பெற்ற வசனம் ஒன்றை பதிவிட்ட ப்ளூ சட்டை மாறன் ' ராமர் கோவில் குறித்து தலீவர் அன்று சொன்னது.' என்று பதிவிட்டுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full