ரஜினியின் ஆண்டு வருமானம் மற்றும் சொத்து மதிப்பு..!வெளியான விவரம்..!

By Rajkumar · 14/12/2018

40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவின் முடி சூடா மன்னனாக இருந்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இதுவரை 164 படங்களில் நடித்துள்ள ரஜினி சினிமாவை தவிர ஒரு சில தனியார் விளம்பரங்களிலும் நடித்துள்ளார் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று. 

சமீபத்தில் பிரபல போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்ட இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் டாப் 100 பிரபலங்களில் கூட ரஜினி ஆண்டுக்கு 50 கோடி வருமானத்துடன் அந்த பட்டியலில் 14 இடத்தில் இடம்பெற்றார் ரஜினி.

தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இவரது சொத்து மதிப்பு ரூ.360 கோடி  என்று ஃபின்ஆப் வெளியிட்டுள்ளது.அதில் நடிப்பிற்காக இவர் வாங்கும் சம்பளம் மற்றும் இவரது வீடு கார்கள் ஆகியவற்றை வைத்து இந்த சொத்து மதிப்பு  கணக்கிடப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் வாங்கிய வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ. 35 கோடி. ரஜினிகாந்திடம் மொத்தம் 3 சொகுசு கார்கள் இருக்கின்றன. ரேஞ்ச் ரோவர், பென்ட்லி  மற்றும் டொயோட்டா இன்னோவா. ரூ.110 கோடிக்கு தனிப்பட்ட முதலீடுகள் உள்ளன. 

ரஜினிகாந்தின் ஒவ்வொரு ஆண்டு வருமானங்கள் இதோ:-
 1.2016 - ரூ .65 கோடி
 2.2015 - ரூ . 58 கோடி
 3.2014 - ரூ. 35 கோடி
 4.2013 - ரூ. 60 கோடி
 5.2012 - ரூ . 49 கோடி

Tamil Behind Talkies AMP · Quick view
View full