இந்தியாவின் பழைய மற்றும் பெரிய தயாரிப்பு நிறுவனத்தில் ஒன்று ஏவிஎம். ஏவிஎம் நிறுவனத்தை பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத தயாரிப்பு நிறுவனங்களில் ஏவிஎம் ஒன்று. இந்த நிறுவனம் ஏவி மெய்யப்ப செட்டியாரால் தொடங்கப்பட்டது. தற்போது இந்த ஏவிஎம் நிறுவனம் எம். சரவணனாலும் அவருடைய மகன் குகனாலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மூலம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய பழமொழி திரைப்படங்களை தயாரித்து இருக்கிறது.

இந்த நிறுவனம் சிவாஜி கணேசன், கமல், ரஜினி போன்ற பல முன்னணி நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் பல இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்களையும் அறிமுகப்படுத்தியது ஏவிஎம் நிறுவனம் தான். சொல்லப் போனால், தமிழ் சினிமா வர்த்தகத்தை நிறுவி விரிவு படுத்தியதில் ஏவிஎம் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. மேலும், சினிமா உலகில் தயாரிப்பு நிறுவனத்திற்கு என்ற ஒரு ஒழுங்கை கற்றுக் கொடுத்தது ஏவிஎம் தான்.

Advertisement

ஏவிஎம் கொள்கை:

அதோடு படப்பிடிப்பு தொடங்கும் போது அந்த படத்தின் தேதியை அறிவிப்பது ஏவிஎம் நிறுவனத்தின் ஒரு கொள்கை. அந்த அளவுக்கு துல்லியமாக படப்பிடிப்பை திட்டமிட்டு இயக்கி வெளியிடுவார்கள்.பின் நாளடைவில் சினிமா தயாரிப்பும் அதன் வெளியிடும் வர்த்தகம் சூதாட்டமாக மாறிய பின் ஏவிஎம் பட தயாரிப்பிலிருந்து விலகி விட்டது. இவர்கள் கடைசியாக தயாரித்த படமே ரஜினி நடித்த சிவாஜி தான். இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் சிவாஜி.

ஏவிஎம் கடைசியாக தயாரித்த படம்:

இந்த படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரேயா, சுமன், விவேக், மணிவண்ணன், நயன்தாரா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் விமர்சன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால், ஏவிஎம் ஒரு படத்தை தயாரிக்கிறது என்றால் பட்ஜெட்டை இயக்குனர் முதலிலேயே நிறுவனத்திடம் கொடுத்து விட வேண்டும். ஆனால், சிவாஜியில் அந்த விதிமீறல் நடந்தது. சங்கர் எப்போதுமே சொன்ன பட்ஜெட்டை விட அதிகமாக தான் படத்தை எடுப்பார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இதனால் ஏவிஎம் நிறுவனம் ரஜினிக்காக தங்களுடைய கொள்கையை விட்டு தந்தது. அது மட்டும் இல்லாமல் படத்தை தொடங்கினால் எப்போது சங்கர் முடிப்பார் என்று அவருக்கே தெரியாது.

Advertisement

ஏவிஎம் விட்டுக்கொடுத்த கொள்கை:

இதனால் திட்டமிட்டபடி படத்தை வெளியிட முடியவில்லை. சிவாஜி படத்தை எடுக்க அதிக நாட்கள் ஆனது. இப்படி ரஜினிக்காக நிறைய விஷயத்தை ஏவிஎம் நிறுவனம் சமரசம் செய்து கொண்டது. இது ஒரு பக்கம் இருக்க, இவர்கள் பெரும்பாலும் தங்கள் படங்களில் பயன்படுத்திய உடைய அப்படியே விட்டு விடாமல் உரிய முறையில் பாதுகாத்து வைப்பது தான் ஏவிஎம் வழக்கம். இந்த நிலையில் ரஜினி பயன்படுத்திய உடையை இன்னொரு படத்தில் அடியாள் கதாபாத்திரத்திற்கு பயன்படுத்தியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement

ரஜினி பயன்படுத்திய ஆடை:

ரஜினியின் மிஸ்டர் பாரத் படம் 1986 ஆம் ஆண்டு எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் ஏவிஎம் நிறுவனம்தான் தயாரித்து இருந்தது. அதில் ரஜினி உள்ளிட்ட பலர் பயன்படுத்திய ஆடைகள் வழக்கம் போல் பாதுகாக்கப்பட்டு இருந்தது. பின் அடுத்த ஆண்டு ஏவிஎம் மீண்டும் ரஜினி வைத்து மனிதன் படத்தை தயாரித்திருந்தது. அப்போது ரஜினி பயன்படுத்திய டி-ஷர்ட்டை மனிதன் படத்தில் அடியாள் கதாபாத்திரத்திற்கு பயன்படுத்தியிருந்தார்கள். இவ்வளவு சிக்கனமும், திட்டமும் நடத்தி இருந்த ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பிலிருந்து விலகி இருப்பது தமிழ் சினிமாவிற்கு ஒரு பெரிய இழப்பு என்று சொல்லலாம்.

Advertisement