மகளின் இரண்டாவது கல்யாணம்.! போலீசிடம் உதவி கேட்ட லதா ரஜினிகாந்த்.!

By Rajkumar · 31/1/2019

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றழைக்கபடும் நடிகர் ரஜினிகாந்திற்கு, சௌந்தர்யா மற்றும் ஐஸ்வ்ர்யா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்டார். மேலும்,சௌதர்யா கடந்த 2010 ஆம் ஆண்டு அஸ்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

அஷ்வினுக்கும், சௌந்தர்யாவிற்ங்கும் தேவ் என்ற மகனும் இருக்கின்றனர். திருமணமான சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றுவிட்டனர். இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள உள்ளார்.

வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி சவுந்தர்யா மற்றும் விசாகன் திருமண வரவேற்பு சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜானவாசத்தில் நடைபெற உள்ளது.மேலும், திருமணத்திற்கு பின் வரவேற்பு நிகழ்ச்சி 12-ம் தேதி நடைபெறுகிறது.

இதில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ள இருப்பதால் போயஸ் தோட்டத்தில் இருக்கும் தனது இல்லத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கக் கோரி லதா ரஜினிகாந்த் காவல் நிலையத்தில் உதவி மனு அளித்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full