லாக் டவுன் டைமில் ரஜினி வீட்டில் நடந்த கொண்டாட்டம். யாருக்கு தெரியுமா?

By Rajkumar · 7/5/2020

உலகமெங்கும் தற்போது 'கொரோனா' எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், '144' போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

'கொரோனா' பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. கொரோனா நிவாரண பணிகளுக்காக பல திரையுலக பிரபலங்கள் நிதியுதவி கொடுத்து உதவி வருகின்றனர். இந்த லாக் டவுன் டைமில் பல திரையுலக பிரபலங்கள் ஷூட்டிங் எதுவும் இல்லாததால், வீட்டில் தங்களது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவு செய்து பாதுகாப்பாக இருந்து வருகின்றனர்.

திரையுலக பிரபலங்கள் சமூக வலைத்தளமான ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பல விதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை ஷேர் செய்த வண்ணமுள்ளனர். அதில் பாட்டு பாடுவது, சமைத்து கொண்டிருப்பது, ஜிம்மில் வொர்க்கவுட் செய்வது, பாடலுக்கு நடனமாடுவது, டிக் டாக் செய்வது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிகம் வெளியாகி வருகின்றது.

https://www.instagram.com/p/B_15pUcDS4x/

இந்நிலையில், இந்த லாக் டவுன் டைமில் முன்னணி நடிகர்களில் ஒருவரான 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் மகளும், பிரபல இயக்குநருமான சௌந்தர்யா தனது மகன் வேத்-யின் பிறந்த நாளை சிம்பிளாக வீட்டிலையே கொண்டாடியிருப்பதாக தகவல் வெளி வந்திருக்கிறது. இதை இயக்குநர் சௌந்தர்யாவே சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி தெரிவித்ததோடு, பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார்.

சௌந்தர்யா 2010-ஆம் ஆண்டு அஷ்வின் ராம்குமாரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் மகன் தான் வேத். பின், சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார் சௌந்தர்யா. அதன் பிறகு விஷாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் சௌந்தர்யா. சௌந்தர்யா, 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் 'கோச்சடையான்' மற்றும் தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி' பார்ட் 2 ஆகிய இரண்டு படங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full