தினமும் பால் அபிஷேகம், பூஜை - ரஜினிக்கு சிலை வைத்து கடவுளாய் வழிபடும் ரசிகர் - உங்கள் கருத்து என்ன?

By subhashini · 27/10/2023

மதுரையில் ரஜினிகாந்த்துக்கு கோயில் கட்டி சிலை வைத்து ரசிகர் பூஜை செய்யும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே சினிமா உலகில் பிரபலமாக இருக்கும் நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்கள் மன்றம் வைப்பது மட்டும் இல்லாமல் சிலை வைத்து வருகிறார்கள். அந்த வகையில் குஷ்பூ, நயன்தாரா, சமந்தா, நிதி அகர்வால் ஆகியோருக்கு ரசிகர்கள் கோயில் கட்டி சிலை வைத்திருப்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு ரசிகர் ஒருவர் கோயில் கட்டி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மதுரை திருமங்கலத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவர் ரஜினியின் தீவிர ரசிகர்கள். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு கோயில் கட்டி சிலை வைத்து வழிபாடு செய்திருக்கிறார். மேலும், அந்த கோயிலில் ரஜினிகாந்தின் சிலைக்கு கீழ் தன்னுடைய தாய், தந்தையர் புகைப்படத்தையும், விநாயகர் புகைப்படத்தையும் கார்த்திக் வைத்திருக்கிறார்.

ரஜினிக்கு சிலை:

சுமார் 250 கிலோ கருங்கல்லில் ரஜினிகாந்த்துக்கு சிலை வைத்திருக்கிறார். தினமும் ரஜினி சிலைக்கு பால் அபிஷேகம் எல்லாம் செய்து குடும்பத்துடன் வழிபாடு நடத்தி வருகிறார் கார்த்திக். இவர் ரஜினி ரசிகர் என்பதை தாண்டி தீவிர பக்தரே என்று சொல்லலாம். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தில் வீடியோவை ஷேர் செய்து ரஜினி ரசிகரை பாராட்டியும் வருகிறார்கள்.

View this post on Instagram

A post shared by Sun News Tamil (@sunnews)

ரஜினி திரைப்பயணம்:

தமிழ் சினிமாவில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மாஸ் காட்டி இருக்கிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக பேசப்படவில்லை. இதனால் இவர் ஜெயிலர் படத்தில் அதிக கவனம் செலுத்தி நடித்து இருந்தார். அதற்கேற்ப நெல்சனின் முந்தைய படமான விஜயின் பீஸ்ட் படமும் படு தோல்வி அடைந்து இருந்தது. இதனால் நெல்சனும் கதைக்களத்தில் அதிக கவனம் செலுத்தி இருந்தார்.

ஜெயிலர் படம்:

மேலும், அதிக முயற்சிக்கு பின் ரஜினியின் “ஜெயிலர்” படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் கிருஷ்னன், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஷாக்கி ஷெரப், மோகன் லால், விநாயகம் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு யூடுயூப் விமர்சகர்களும், பிரபலங்கள், ரசிகர்கள் என எல்லோருமே பாசிட்டிவான கமெண்ட்களை கொடுத்து வருகிறார்கள். உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் ஜெயிலர் படம் கொண்டாடப்பட்டு இருந்தார்கள்.

ரஜினி நடிக்கும் படங்கள்:

இதை அடுத்து தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். அதன் பின் ரஜினிகாந்தின் 170 வது படத்தை லைக்கா நிறுவனமே தயாரிக்கிறது. இந்த படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் டி ஜே ஞானவேல் இயக்குகிறார். தற்போது படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதற்கு பின் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 171 படத்தை லோகேஷ் இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகியிருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full