ஜெயிலரில் தான் பயன்படுத்திய காஸ்ட்லியான பொருளை ஜாபருக்கு கொடுத்துள்ள ரஜினி. விலை எவ்ளோ தெரியுமா ?

By Rajkumar · 23/8/2023

ஜெயிலர் படத்தில் ரஜினி பயன்படுத்திய பொருளை தான் கேட்டதும் கொடுத்துவிட்டதாக அந்த படத்தில் நடித்த ஜாபர் சில புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஜெயிலர் படம் குறித்த செய்திகள் தான் உலா வந்து கொண்டிருக்கிறது. ரஜினியின் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியிருந்த படம் ஜெயிலர். இந்த படம் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்து வருகிறது.

மேலும், இந்த படத்தை ஃபேன் இந்தியா படமாக்க ஹிந்தியில் ஜாக்கி ஷெரப், மலையாளத்தில் மோகன்லால், கன்னடத்தில் சிவராஜ்குமார், தெலுங்கில் சுனில் என்று பல நட்சத்திர பட்டாளங்களை வைத்து இந்த படத்தை மாஸாக எடுத்திருக்கிறார் நெல்சன். தமிழ் சினிமா வரலாற்றிலேயே யாரும் படைக்காத சாதனையை ஜெயிலர் படம் படைத்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனமும் அறிவித்திருக்கிறது.

ஜெயிலர் படம்:

அதோடு இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கும் மாஸ் ஹீரோக்கள் உடன் துணை வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் பற்றி தற்போது சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டிருக்கிறது. அந்த வகையில் சிவராஜ் குமார் உடன் இருக்கும் அடியாட்களில் ஒருவராக நடித்திருப்பவர் ஜாபர். இவர் காமெடி கலந்த கதாபாத்திரத்தில் ரவுடியாக நடித்திருக்கிறார். இவர் விஜய் டிவி நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார்.

ஜாபர் திரைப்பயணம்:

அதற்குப் பிறகு விக்னேஷ் சிவன் தான் இவரை சினிமா உலகில் அறிமுகம் செய்தார். இவர் பாவ கதைகள் என்ற வெப் தொடரில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்த விக்ரம் படத்தில் ஜாபர் நடித்திருந்தார். பின் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்திலும் ஜாஃபர் நடித்திருந்தார். தற்போது ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார்.

ரஜினி கொடுத்த பரிசு :

இவர் உயரம் குறைவு என்பதாலும் தனக்குள் பல திறமைகளை வைத்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் ஜெயிலர் படத்தில் ரஜினி பயன்படுத்திய சூப்பரான கண்ணாடி ஒன்றை தனக்கு பரிசாக வழங்கி இருந்ததாக ஜாபர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர்' நான் கேட்டேன் அவர் கொடுத்தார் நன்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த புகைப்படமே எல்லாம் சொல்லும் என் எல்லாமே' என்று பதிவிட்டுள்ளார். இந்த கண்ணாடியின் விலை சுமார் 270000 என்றும் கூறப்படுகிறது.

https://www.youtube.com/shorts/8P2-YSLiHPY

ஜாபர் காதலியிடம் ரஜினி சொன்னது :

ஏற்கனவே பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஜாபர் ' ஜெயிலர் படப்பிடிப்பின் போது தனது காதலி குறித்து ரஜினி கேட்டதாகவும் அப்போது அவரும் அவரைப் பார்த்து உட்காருமா, காபி சாப்பிடுறியா என்றுரஜினி கேட்டு பின் தன் கேர்ள் பிரண்டிடம் என்னை பார்த்து ஜென்டில்மேன் என்று அவர் சொன்னதாகவும் அதனை அவருடைய நண்பர்களிடம் எல்லாம் கூறி கிண்டல் செய்ததாகவும் கூறி இருந்தார் ஜாபர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full