ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு பேரனாக நடிக்கும் நடிகர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பல ஆண்டு காலமாக கோலிவுட்டில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருக்கிறது. இதனால் இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள்.

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், குடும்ப பாசத்தையும் மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்கள் ஜெயிலர் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை நெல்சன் இயக்குகிறார்.

Advertisement

ஜெயிலர் படம்:

மேலும், இந்த படம் நெல்சன்- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- அனிரூத் கூட்டணியில் உருவாக இருக்கிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், ஜெயிலர் படத்தில் சிறையில் இருக்கும் ஒரு தீவிரவாதியை தப்பிக்க வைக்க வெளியிலிருந்து ஒரு நபர் வருகிறார்.

படம் குறித்த தகவல்:

அவரை தடுக்க ஜெயிலர் போராடுவது தான் கதை. அந்த ஜெயிலர் கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் என்றும், ஜெயிலராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. தற்போது ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், மலையாள நடிகர் விநாயகன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் நடிக்கிறார்கள். இதை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

Advertisement

படத்தில் நடிக்கும் நடிகர்கள்:

இது தவிர அறந்தாங்கி நிஷா, பருத்தி வீரன் சரவணன் என சில நடிகர்கள் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் கதாநாயகி தமன்னா என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக விஜய் கார்த்திக் கண்ணன், கலை இயக்குனராக டி ஆர் கே கிரண் பணியாற்றுகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தில் ரஜினியின் பேரனாக நடிக்கும் நடிகர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

Advertisement

படத்தில் ரஜினியின் பேரன்:

அதாவது, சமீப காலமாக youtube சேனலில் கலக்கி கொண்டிருப்பவர் ரித்விக். இவருடைய வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் படு பேமஸ். இதனால் சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்திருந்த O2 படத்தில் நயன்தாராவுக்கு மகனாக ரித்விக் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது ஜெயிலர் படத்தில் ரஜினியின் பேரன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பலரும் ரித்விக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement