தூய்மை பணியாளர் பத்மாவின் நேர்மையான செயல், தங்கச் சங்கிலி வழங்கிய ரஜினி - குவியும் பாராட்டு

By subhashini · 3/2/2026

தூய்மை பணியாளர் பத்மா செய்த செயலை பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் தங்க சங்கிலி பரிசு அளித்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சென்னையில் தியாகராய நகர் பகுதியில் முப்பாத்தம்மன் கோவில் தெருவில் உள்ள வண்டிக்காரன் சாலை பகுதியில் பத்மா தூய்மை பணியில் கடந்த மாதம் ஈடுபட்டிருந்தார். அப்போது சாலை ஓரத்தில் கிடந்த ஒரு பையை பத்மா கையில் எடுத்திருக்கிறார்.

அந்த பையில் தங்க நகைகள் இருப்பதை பார்த்த பத்மா, தன்னுடைய மேல் அதிகாரிகளுக்கு தகவல் அளித்து பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டார். பத்மா ஒப்படைத்த பையில் 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 45 சவரன் நகைகள் இருந்தது தெரிய வந்தது. பின் விசாரணையில் நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் இதே அளவு நகைகள் தான் காணாமல் போனதாக போலீசில் புகார் கொடுத்திருந்தார். பின் பத்மா கொடுத்த அந்த நகைகள் அவருடையது தான் என்று உறுதி செய்யப்பட்டது.

பத்மா செயல்:

பிறகு அந்த நகைகள் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை அடுத்து இந்த சம்பவம் சோசியல் மீடியாவில் மிக வைரலாகி இருந்தது. பலருமே தூய்மை பணியாளர் பத்மாவின் நேர்மையை பாராட்டி இருந்தார்கள். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களும் பத்மாவை நேரில் அழைத்து பாராட்டி ஒரு லட்ச ரூபாய் ரொக்க பரிசும் வழங்கி இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் ரஜினிகாந்த், பத்மாவை நேரில் அழைத்து அவருடைய நேர்மையே பாராட்டி இருக்கிறார்.

ரஜினி கொடுத்த பரிசு:

அது மட்டும் இல்லாமல் ரஜினி, தங்க செயின் ஒன்றையும் பத்மாவிற்கு பரிசாக அளித்திருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் பத்மாவின் குடும்பத்தினர் எல்லோருமே சேர்ந்து ரஜினிகாந்துடன் எடுத்து புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பே மதுரையில் குறைந்த விலையில் பரோட்டா விற்பனை செய்து வரும் தன்னுடைய ரசிகரை நேரில் அழைத்து பாராட்டி தங்க செயினை ரஜினி பரிசளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/watch?v=PPfa-QUKLS8&pp=0gcJCZEKAYcqIYzv

குவியும் பாராட்டு:

தமிழ் சினிமா உலகில் 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியாகியிருந்த கூலி படமும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. தற்போது ரஜினிகாந்த் அவர்கள் ஜெயிலர் 2 என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதை அடுத்து இன்னும் சில படங்களிலும் ரஜினிகாந்த் கமிட் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full