வெளியானது ரஜினி - முருகதாஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில்.!
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘சர்கார்’ திரைப்படத்திற்கு பின்னர், நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒரு படத்தை எடுக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் தகவல்கள் பல நாட்களாக அடிபட்டு வரும் நிலையில் இன்னும் இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருக்கிறது.
https://twitter.com/LycaProductions/status/1115449253172666368
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் நடைபெற உள்ளதாக ஏற்கனவே சில தகவல்கள் வெளியானது. மேலும், முதற்கட்ட படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 10ஆம் தேதி துவங்க உள்ளது. சமீபத்தில் வந்த தகவலின்படி இன்று(ஏப்ரல் 3) இந்த படப்பிடிப்பிற்கான போட்டோ ஷுட்கள் நடைபெற்றதாகவும் அதில் ரஜினி கலந்து கொண்டதாகவும் நம்பகமான தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இதில் கூடுதல் தகவல் என்னவெனில் இந்த படத்தில் ரஜினியின் வில்லனாக தேசிய சூர்யா நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது மேலும் ரஜினி போஸ் கொடுத்திருந்த புகைப்படத்தில் ஒரு ஓரத்தில் எச்சில் சூர்யாவும் நிற்பது போல இருக்கின்றது. எனவே ,இந்த படத்தில் பேசிய சூர்யா நடிப்பது உறுதியாகி உள்ளது. நடிகர் சூர்யா ஏற்கனவே முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இப்படி படத்தின் பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் இன்று (ஏப்ரல் 9) திடீரென்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகையுள்ளது. மேலும், இந்த படத்திற்கு தர்பார் என்று பெயர் வைத்துள்ளனர். தற்போது இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.