ரஜினியின் அப்பா போன்று இருந்த நபர் காலமானார்..!பதிரி சென்ற ரஜினி..! யார் தெரியுமா.!

By Rajkumar · 18/12/2018

ரஜினியின் நெருங்கிய நண்பரான முத்தப்பா காலமானார். எம் ஜி ஆர் சிவாஜி காலகட்டம் தொடங்கி இன்று வரை பல்வேறு நடிகர்களுக்கு மேக் அப் மேன் ஆர்டிஸ்டாக பணியாற்றி வருகிறார். ஏ வி எம் மின் ஆஸ்தான மேக் அப் மேனான இவர் ரஜினியின் பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார். 

ரஜினிக்கு மேக் அப் மேனானக மட்டுமில்லாமல் அவரது நண்பராக இத்தனை ஆண்டுகள் இருந்து வந்தார் முத்தப்பா. என்னைப் பொறுத்தவரை ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார் அல்ல. எனது நெருங்கிய நண்பர் மற்றும் நான் பெற்றெடுக்காத என் பிள்ளையும் கூட’ என்று ஒரு பேட்டியில் கூட தெரிவித்திருந்தார் முத்தப்பா.

ஒரு கடத்தில் ரஜினியின் பர்சனல் மேக் அப் மேனாக மாறி அவரிடம் மட்டுமே பணியாற்றத் துவங்கினார். ரஜினியின் சிபார்சில் அவரது 30கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை பாத்திரங்களில் நடிக்கவும் செய்தார்.

இன்று காலை 7.15 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 75. தகவல் அறிந்த ரஜினி அவரது இல்லத்துக்கு விரைந்துகொண்டிருக்கிறார். மேலும், பல்வேறு முக்கிய திரைக்களைஞர்களும் முத்தப்பாவின் இறுதி அஞ்சலியில் கலந்துகொள்ள விரைந்துள்ளனர்.   

Tamil Behind Talkies AMP · Quick view
View full