'துரந்தர் 2'வை 'மஸ்ட் வாட்ச்' - புகழ்ந்து தள்ளிய ரஜினிக்கு நன்றி சொன்ன இயக்குநர் ஆதித்யா தர்

By subhashini · 24/3/2026

பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக வலம் வருபவர் ரன்வீர் சிங். இவர் 2010 ஆம் ஆண்டு பேண்ட் சர்மா பாராத் என்ற திரைப் படத்தின் மூலம் தான் பாலிவுட் திரைப்படத் துறைக்கு அறிமுகமாகி இருந்தார். அதன் பின் இவர் பல படங்களில் நடித்து தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

அந்த வகையில் கடந்த ஆண்டு ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி இருந்த படம் துரந்தர். இந்த படத்தை இயக்குனர் ஆதித்யா தர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் சாரா அர்ஜுன், மாதவன், அர்ஜுன் ராம்பல் உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து இந்த படத்தினுடைய இரண்டாவது பாகமான துரந்தர் - தி ரிவெஞ்ச் படம் கடந்த வாரம் திரையரங்களில் வெளியாகியிருந்தது.

துரந்தர் - தி ரிவெஞ்ச் படம்:

முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இந்த படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தினுடைய மேக்கிங் நடிகர்களின் நடிப்பு என எல்லாமே சிறப்பாக இருந்தது என்று பாராட்டைப் பெற்று வந்து இருந்தாலும் இந்த படம் தொடர்பாக விமர்சனங்களும் எழுந்து இருக்கிறது. மேலும், இந்த படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பாராட்டி பதிவு ஒன்று போட்டு இருந்தார்.

ரஜினியின் பாராட்டு:

அதில் அவர், என்ன ஒரு படம். பாக்ஸ் ஆபீஸ் கா பாப். ரன்வீர் சிங்கிற்கும் மொத்த படக்குழுவினருக்கும் என்னுடைய பாராட்டுக்கள். ஒவ்வொரு இந்தியனும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம், ஜெய்ஹிந்த் என்று கூறியிருந்தார். இதற்கு டிவிட் செய்து படத்தின் இயக்குனர் ஆதித்யா தர், நாங்கள் வளர்ந்த காலத்தில் பொழுதுபோக்கு என்றால் அது நீங்கள் தான் சார். பல சதாப்தங்களாக நீங்கள் எங்களை விசில் அடிக்க வைத்து, சிரிக்க வைத்து, அழ வைத்தவர்

நன்றி சொன்ன இயக்குனர்:

இன்றும் அதே சுவாக் உடனும் அழகிய கிரேசுடனும் அதை தொடர்ந்து செய்து வந்து கொண்டிருக்கிறீர்கள். இது மாயாஜாலம் தான். நீங்கள் துரந்தர் 2 படத்தை மஸ்ட் வாட்ச் என்று அழைப்பது என் வாழ்க்கையின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் தருணமாக உணர்கிறேன். இது நம் அனைவரையும் பெரிய கனவுகளை காண கற்றுத் தந்த அந்த மனிதர்களிடமிருந்தே கிடைத்த ஆசீர்வாதம் போல இருக்கிறது. ஜெய்ஹிந்த் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full