தனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தவர்களுக்கு ரஜினியின் பதில்..!

By Rajkumar · 12/12/2018

நடிகர் ரஜினிகாந்தின் `பேட்ட’ படத்தின் பாடல்கள் ஹிட் அடித்த குஷியில் இருக்கிறது படக்குழு. படத்தில் ரஜினியின் கெட் - அப் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. `பேட்ட' படத்தின் புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்கள் ரஜினியின்  பிறந்தநாலான இன்று ரஜினிக்கு வாழ்த்து கூறிவருகின்றனர்.


இன்று காலை 11 மணிக்கு ரஜினியின் பிறந்தநாள் ட்ரீட்டாக பர்த்டே டீசரை வெளியிட உள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நடிகர்களும் அரசியல் பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பல்வேறு பிரபலங்களும் ரஜினிக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில் ரஜினியும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக தனது நன்றிகளை தெரிவித்திருந்தார். அது ரஜினி அனுப்பிய ரிப்ளையா இல்லை அவரது அட்மின் போட்டதா என்று உறுதியாக தெரியவில்லை.

[embed]https://twitter.com/rajinikanth/status/1072715115894464512[/embed]

[embed]https://twitter.com/rajinikanth/status/1072714978346467328[/embed]

[embed]https://twitter.com/rajinikanth/status/1072715641893732353[/embed]

இருப்பினும் தனது பிறந்தாள் அன்று கூட தனக்கு வாழ்த்து சொன்னவர்களுக்கு நேரம் ஒதுக்கி நன்றி தெரிவித்த ரஜினி எதனால் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கபடுகிறார் என்பதை நிரூபித்துள்ளது. ரஜினியை வாழ்த்திய பிரபலங்களும், அதற்கு ரஜினி அளித்த பதிலின் தொகுப்பில் கொஞ்சம் இதோ. 

Tamil Behind Talkies AMP · Quick view
View full