சந்திரமுகி 2 படத்தை பார்த்துவிட்டு ரஜினி என்ன சொன்னார் ? - பி.வாசு சொன்ன தகவல்.

By Arun · 29/9/2023

சந்திரமுகி 2 படம் பார்த்து ரஜினி பாராட்டி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் நடனத்தின் மூலம் தான் சினிமா துறைக்குள் அறிமுகமானார். பின் இவர் சினிமாவில் பிரபலமான நடன இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்டு திகழ்ந்து வருகிறார்.

இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அந்த வகையில் தற்போது ராகவா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் சந்திரமுகி 2. கடந்த 2005ஆம் ஆண்டு ரஜினி, ஜோதிகா, பிரபு நடிப்பில் சந்திரமுகி படம் வெளியாகி பிரபு அளவில் வெற்றி பெற்றது. அதனை அடுத்து தற்போது இந்த படத்தினுடைய இரண்டாம் பாகத்தை இயக்குனர் பி வாசு இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் கங்கனா ரனாவத் வடிவேலு, ராதிகா, மகிமா, லட்சுமி மேனன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

சந்திரமுகி 2 படம்:

இந்த படத்திற்கு கீரவாணி இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படம் இன்று வெளியாகி இருக்கிறது.சந்திரமுகி 2 படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருகின்றது . இதில் ராகவா லாரான்ஸ் வேட்டையன் ரோலில் நடித்திருக்கிறார். படத்தில் ரங்கநாயகியாக நடிக்கும் ராதிகா குடும்பத்தில் அடுத்தடுத்து தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் மொத்த குடும்பமும் குலதெய்வ கோயிலுக்கு சென்று பூஜை செய்தால் தான் பிரச்சனை சரியாகும் என்று சொல்கிறார்கள்.

படத்தின் கதை:

இவர்களுக்கு பாதுகாவலனாக ராகவா லாரன்ஸும் ராதிகா வீட்டிற்கு வருகிறார். இவர்கள் அனைவரையும் குலதெய்வ கோயிலுக்கு ராதிகா அழைத்துக் கொண்டு செல்கிறார். பின் அவர்களை குலதெய்வ கோயிலுக்கு அருகில் இருக்கும் வேட்டையபுரம் அரண்மனையில் தங்க வைக்கிறார். அனைவரும் எதிர்பார்த்தது போல சந்திரமுகி அறைக்குள் ஒருவர் செல்கிறார். அவர் வழக்கம் போல் தப்பித்து விடுகிறார். அதற்குப் பிறகு சந்திரமுகி யாரு உடம்பில் புகுந்தார்? சந்திரமுகியை வேட்டையன் என்ன செய்தார்? ராகவா லாரன்ஸ்க்கும் வேட்டையனுக்கும் என்ன தொடர்பு? என்பது தான் படத்தின் மீதி கதை.

படத்தின் விமர்சனம் :

மேலும், இந்த படம் நேற்று தமிழகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. உலகம் முழுவதும் 450 க்கும் மேற்பட்ட திரையரங்களில் சந்திரமுகி 2 படம் வெளியாகியிருக்கிறது. படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா நடிப்பு பட்டையை கிளப்பி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் படத்திற்கு மற்றொரு பக்கபலமாக கீரவாணியின் இசை அமைந்திருக்கிறது.

சூப்பர் ஸ்டார் சொன்ன கமெண்ட்:

அதோடு படத்தை பார்த்து ரசிகர்கள், பிரபலங்கள் எனும் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் சந்திரமுகி 2 படத்தை பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சும்மா பின்னிட்டீங்க என்று இயக்குனர் பி வாசு, ராகவா லாரன்ஸ் ஆகியோரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாராட்டி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதை கேட்டு பட குழுவினர் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full