பதினாறு வயதினிலே காலத்தில் ரஜினியை அவனமானப்படுத்திய தயாரிப்பாளர். தர்பார் மேடையில் ரஜினி உருக்கம்.

By Rajkumar · 8/12/2019

தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது நடிகர் ரஜினிகாந்தின் "தர்பார்" படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், அவர் மனைவி லதா, நடிகர் ராகவா லாரன்ஸ், சந்தோஷ் சிவன். எ.ஆர்.முருகதாஸ் உட்பட பல்வேறு நட்சத்திரங்கள் பங்கேற்றார்கள். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தன்னுடைய வாழ்க்கை மற்றும் சினிமாவிலும் சந்தித்த பல கஷ்டங்களை பற்றி பேசி உள்ளார். அதில் அவர் கூறியது, நான் நடிக்கத் துவங்கிய காலத்தில் பல இன்னல்களை சந்தித்து உள்ளேன். மேலும், ஆரம்பத்தில் நான்கைந்து படங்களில் நடித்து இருந்தேன்.

அப்போது 'பதினாறு வயதினிலே' படம் வெளியாகி நன்றாக போய்க் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் தான் ஒரு பிரபல தயாரிப்பாளர் என்னுடைய வீட்டிற்கு வந்து என்னிடம் நடிக்க கால்சீட் கேட்டார். நானும் ஓகே சொல்லி ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கேட்டேன். இன்னும் இரண்டு நாளில் ஷூட்டிங் தொடங்கி விடும். இப்போது என்னிடம் பணம் இல்லை, நாளை கொடுத்து அனுப்புகிறேன் என அந்த தயாரிப்பாளர் கூறினார். ஆனால், அந்த புரொடக்ஷன் மேனேஜர் பணம் கொண்டு வரவில்லை. அது பற்றி அந்த தயாரிப்பாளருக்கு போன் செய்து கேட்ட போது நாளை சூட்டிங் வாங்க மேக்கப் போடுவதற்கு முன்பு தருகிறேன் என்று கூறினார். நானும் ஷூட்டிங்கும் சென்றேன். அங்கு நான் பணம் கொடுத்தால் தான் மேக்கப் போடுவேன் என்று கூறினேன். அதற்கு பிறகு அங்கு வந்த தயாரிப்பாளர் என்னை மோசமாகத் திட்டி உனக்கு படத்தில் கேரக்டர் இல்லை வெளியே போ என சொன்னார்.

இதையும் பாருங்க : 7 வருடத்திற்கு முன் விஜய் சேதுபதியை சந்திக்க 2 மணி நேரம் காத்திருந்த லோகேஷ் கனகராஜ். பின்னர் நடந்த அதிசயம்.

நானும் போகிறேன் கார் அனுப்புங்கள் என கேட்டதற்கு நீ நடந்து போ, கொடுக்க முடியாது என கூறினார். அதற்கு பிறகு தான் நான் சினிமா துறையில் பயங்கரமாக உழைக்கத் தொடங்கினேன். பின்னர் என் வாழ்க்கையில் முன்னேறி கார் வாங்கி அதே ஸ்டுடியோவில் கொண்டு சென்று நிறுத்தினேன் என்று கூறினார். மேலும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் "தர்பார்". இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து உள்ளார். மேலும், ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடித்து உள்ளார். ஆதித்யா அருணாசலம் என்ற பெயரில் ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தில் நடித்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ளார்.

இவர்களுடன் இந்த படத்தில் யோகி பாபு, ஸ்ரீமன், ஸ்ரேயா சரண், பிரதீப் பப்பர், சுனில் ஷெட்டி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளனர். மேலும், லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள 'சும்மா கிழி சிங்கிள் டிராக்' பாடல் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும், இந்தப் பாடல் ஐயப்பா சாமி பாடலின் டியூணிலிருந்து எடுக்கப்பட்டது என பல விமர்சனங்களை தெரிவித்து வந்தார்கள் நெட்டிசன்கள். இருந்தாலும் இந்த பாடல் வேற லெவல்ல யூடியூபில் தெறிக்க விட்டது. ஆனால், வழக்கம் போல நயன்தாரா இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. மேலும், தர்பார் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பயங்கர எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனைத்தொடர்ந்து இந்த படம் பொங்கலுக்கு திரையரங்கிற்கு வெளியிடப்படும் என்று அறிவித்தார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full