ரஜினி- ஞானவேல் கூட்டணி வெற்றி பெற்றததா? வேட்டையன் படம் எப்படி இருக்கு- முழு விமர்சனம் இதோ

By subhashini · 10/10/2024

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டார் ஆக ஜொலித்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக்பஸ்டர் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் ஜெயிலர் படத்தை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் வேட்டையன். இந்த படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கியிருக்கிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில், ரித்திகா சிங், ராணா, துஷாரா விஜயன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ஆக இருக்கிறார். எந்த ஒரு பாரபட்சமும் பார்க்காமல் ரவுடிகளை சுட்டு தள்ளுகிறார். இன்னொரு பக்கம் நேர்மையான அரசு பள்ளி ஆசிரியராக துஷாரா விஜயன் இருக்கிறார். ஆனால், இவரை கொடூரமான முறையில் யாரோ ஒருவர் கொலை செய்து விடுகிறார். அந்த வழக்கு ரஜினி இடம் விசாரணைக்கு வருகிறது. இன்னொரு பக்கம் குற்றவாளியை காப்பாற்றுவதற்காக பல வேலைகள் நடக்கிறது.

இது தெரியாமல் ரஜினிகாந்த் கடைசி நேரத்தில் உள்ளே வந்து சம்பந்தமில்லாத ஒருவரை என்கவுண்டர் செய்து விடுகிறார். மனித உரிமை அதிகாரியும், நீதிபதியுமாக இருக்கும் அமிதாபச்சன் குழுவினரிடம் இந்த வழக்கு விசாரணைக்கு செல்கிறது. கடைசியில் உண்மையான குற்றவாளி யார்? துஷாரா விஜயனை கொலை செய்தவர்கள் யார்? ஏன் அவர் கொலை செய்யப்பட்டார்? ரஜினிகாந்துக்கு என்ன ஆனது? அமிதாப்பச்சனின் தீர்ப்பு என்ன? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.

படத்தில் வழக்கம்போல் ரஜினி மாஸாகவும் ஸ்டைலாகவும் கலக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு முக்கிய பலமே அவருடைய நடிப்பு தான். போலீஸ் அதிகாரியாக அவருடைய நடை, உடை, பாவனை எல்லாமே வேற லெவலில் இருக்கிறது. ஒரு சமுதாய பிரச்சனையை கமர்சியலாக இயக்குனர் கொண்டு சென்று இருப்பது பாராட்டக்குரிய ஓன்று. இவர்களைத் தொடர்ந்து படத்தில் அமிதாபச்சன் என்கவுண்டர் செய்வது தப்பு என்ற கோணத்தில் வாதம் செய்யக் கூடியவர்.

அவருக்கும் ரஜினிகாந்துக்கும் இடையே நடக்கும் வாக்குவாதங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. இவரை தொடர்ந்து படத்தில் பகத் பாஸில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ரஜினியின் மனைவியாக வரும் மஞ்சு வாரியர் ஆகியோரும் தங்களுக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார்கள். முதல் பாதி நன்றாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் தான் இயக்குனர் கோட்டை விட்டார். கதைக்களம் நன்றாக இருந்தாலும் அதைக் கொண்டு சென்ற விதத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் படம் பட்டையை கிளப்பி இருக்கும்.

படத்திற்கு அனிருத்தின் பின்னணி இசை நன்றாக இருக்கிறது. சில இடங்களில் வசனங்கள் செட்டாகவே இல்ல. அதையெல்லாம் தாண்டி படத்தில் சொல்லப்படும் நீதி ஏற்றுக்கொள்ளும்படியாகவே இல்லை. மொத்தத்தில் படம் ரொம்ப சுமாராகத்தான் இருக்கிறது. ரஜினி ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடுவார்கள்.

நிறை:

ரஜினியின் நடிப்பு அருமை

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார்கள்

கதைக்களம் நன்றாக இருக்கிறது

பின்னணி இசை, ஒளிப்பதிவு ஓகே

குறை:

கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்

சில இடங்களில் வசனங்கள் நன்றாக இல்லை

இரண்டாம் பாதி சுமார்

படத்தில் சொல்லப்படும் நீதி இன்னும் நன்றாக இருந்திருக்கலாம்

கிளைமாக்ஸ் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம்

மொத்தத்தில் வேட்டையன்- தடுமாற்றம்

behindtalkies AMP · Quick view
View full