தமிழ்நாடு முதலமைச்சரின் வாழ்க்கை வரலாறு குறித்த கண்காட்சி புகைப்படத்தை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது கோலிவுட்டில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருக்கிறது. இதனால் இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும், வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினி அவர்கள் தற்போது ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் உட்பட பலர் நடிக்கிறார்கள்.

Advertisement

ரஜினி நடிக்கும் படங்கள்:

மேலும், இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து ரஜினி அவர்கள் இரண்டு படங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒன்று, தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் நடிக்கிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தில் சலாம் என பெயரிடப்பட்டுள்ளது. இன்னொரு படத்தை டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக கூறப்படுகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள்:

மேலும், இந்த இரண்டு படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் முதலமைச்சரின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படத்தை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்தநாளை ஒட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் எங்கள் முதல்வர், எங்கள் பெருமை என்ற பெயரில் முதலமைச்சரின் வாழ்க்கை குறித்த புகைப்பட கண்காட்சியை சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடத்தி இருக்கிறார்கள்.

Advertisement

இந்த கண்காட்சி கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கி நாளையுடன் முடிவடைகிறது. இந்த கண்காட்சிக்கு அரசியல் தலைவர்களும், பல பிரபலங்களும் நேரில் பார்வையிட்டு இருந்தனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தும் இந்த கண்காட்சியை இன்று நேரில் பார்வையிட்டு இருக்கிறார். மேலும், கண்காட்சியில் இருக்கும் ஒவ்வொரு புகைப்படங்களையும் ரஜினிகாந்த் பார்த்து வந்தார். அப்போது அவர் முதலமைச்சர் மிசாவில் கைதாகி சிறையில் இருக்கும் காட்சியை சிலையாக வடிவமைத்து வைத்திருந்தார்கள். அந்த இடத்தில் நின்று ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொண்டார். நடிகர் ரஜினிகாந்த் உடன் யோகி பாபுவும் கண்காட்சியை பார்வையிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

Advertisement

ரஜினி அளித்த பேட்டி:

இதனை அடுத்து ரஜினிகாந்த் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்து இருக்கிறார். அதில் அவர், ரொம்ப அருமையான புகைப்பட கண்காட்சி. சேகர்பாபு இதை பார்ப்பதற்கு அழைத்துக் கொண்டிருந்தார். படப்பிடிப்பில் இருந்ததால் என்னால் வர முடியவில்லை. அதனால் தான் இப்போது வந்தேன். சேகர் பாபு ரொம்ப விசுவாசம் ஆனவர், அன்பானவர். அவருக்கு பாட்ஷா போன்ற இன்னொரு முகமும் இருக்கிறது. என் இனிய நண்பர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்க்கை பயணம், அரசியல் பயணம் இரண்டும் ஒன்று தான். இவர் 54 ஆண்டுகள் அரசியல் பயணத்தில் இருந்தவர். கட்சியில் உழைத்து படிப்படியாக பல பதிவுகளை வகித்து தற்போது முதலமைச்சராக இருக்கிறார்.

ரஜினி கொடுத்த ரிவியூ:

இதற்கு அவருடைய உழைப்பும், மக்கள் கொடுத்த அங்கீகாரம் தான். அவர் நீண்ட நாள் ஆயிலுடன் இருந்து சேவை செய்ய வேண்டும். எனக்கு முதலமைச்சருடன் நடந்த தருணங்கள் நிறைய இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் கண்காட்சியை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் அவர்கள் ரிவ்யூவும் எழுதியிருக்கிறார். அதில் அவர், சூப்பர் கலெக்ஷன், what a memory! என்று கையெழுத்து இட்டிருக்கிறார். தற்போது அந்த புகைப்படமும் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement