18 வயதிலேயே எனக்கு அந்த பிரச்சனை இருந்தது - தன் முடி கொட்டிய காரணம் குறித்து ஓப்பனாக கூறிய ரஜினி. அறிய வீடியோ இதோ.

By Arun · 3/7/2022

தமிழ் சினிமாவில் அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் தமிழ் சினிமாவில் ராஜாவாக திகழ்ந்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த. சூப்பர் ஸ்டார் என்றதும் அவரது ஹேர் ஸ்டைல் தான் நினைவிற்கு வரும். சந்திரமுகி படம் வரை அவர் Patch வைத்து மட்டுமே தான் நடித்து வந்தார். அதன் பின்னரே அவர் விக் வைத்து நடித்து வந்தார். இப்படி ஒரு நிலையில் தனக்கு முடி கொட்டிய காரணம் குறித்தும் தனது முகத்தின் நிறம் மாறிய காரணம் குறித்தும் ரஜினி பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் என்று சொன்னதும் நமக்கு முதலில் நினைவிற்கு வருவது அவரது ஹேர் ஸ்டைல் தான். ரஜினி சினிமாவிற்கு வந்த புதிதில் பரட்டை தலையுடன் பல படங்களில் தோன்றினாலும். ஹாலிவுட்டில் அவர் நடித்த பிளட் ஸ்டோன் படத்திற்கு பின்னர் தான் தன் ஹேர் ஸ்டைலை மாற்றினார் ரஜினி. அதன் பின்னரே அவரது ஹேர் ஸ்டைல் பெரும் பிரபலமானது. இப்படி தனது ஹேர் ஸ்டைலால் பிரபலமான ரஜினிக்கு முடி போன விஷயம் பற்றி அவரே பேசி இருக்கிறார்.

இதையும் பாருங்க : ஷங்கர் என் உறவினர் தான், அவர வைத்து சினிமாவில் நுழைந்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் அவர் - காதல் பட நடிகரின் வேதனை.

ரஜினி சொன்ன காரணம் :

அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில் தனக்கு 18 வயது ஆகும் போதே வெள்ளை முடி இருந்ததாகவும் அதை மறைக்க டை அடிக்க துவங்கியதாகவும் பின்னர் அடிக்கடி டையை மாற்றியதால் தனக்கு முடி கொட்டிவிட்டது என்று கூறியுள்ள்ளார்.மேலும், தாடையிலும் வெள்ளை முடி வளர அதற்கும் டை போட்டு போட்டு முகமும் கருப்பாகி விட்டதாகவும் வேடிக்கையாக கூறியுள்ளார்.

https://twitter.com/chettyrajubhai/status/1543577629873152000

கைகொடுக்காத அண்ணாத்தே :

ரஜினி இறுதியாக சிவா இயக்கத்தில் அண்ணாத்தா படத்தில் நடித்து இருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அண்ணாத்தா படத்தை தொடர்ந்து தற்போது நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி - நெல்சனின் கூட்டணி :

இந்த படம் நெல்சன்- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- அனிரூத் கூட்டணியில் உருவாக இருக்கிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதை அவரே அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார். இவர்களுடன் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் உட்பட நெல்சன் படங்களில் ஆஸ்தான நடிகர்கள் பலரும் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

ஜெயிலர் படத்தின் கதை :

இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தில் சிறையில் இருக்கும் ஒரு தீவிரவாதியை தப்பிக்க வைக்க வெளியிலிருந்து ஒரு நபர் வருகிறார். அவரை தடுக்க ஜெயிலர் போராடுவது தான் கதை. அந்த தீவிரவாதி கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் என்றும், ஜெயிலராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full