புனீத் ராஜ்குமார் இறப்பு : அன்று விமர்சனத்துக்கு உள்ளான ரஜினியின் இரங்கல் செய்தி, இன்று புனீத்திற்கு அவர் கையால் அளித்த கெளரவம்.

By ·

கன்னட திரைஉலகில் பப்பு என்ற அந்தஸ்துடன் உச்ச நடிகராக திகழ்ந்து வந்த புனீத் ராஜ்குமார் கடந்த ஆண்டு காலமானார். இவரது இறப்பு கன்னட திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்து இருந்தது. புனித் ராஜ்குமாரின் இறப்பை தொடர்ந்து கன்னட திரையுடினர் மட்டுமல்லாது பல்வேறு திரைதுறையை சார்ந்த பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி இருந்தார்கள். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புனித் ராஜ்குமாரின் இறப்பிற்கு தன்னுடைய இரங்கலை தெரிவித்து இருந்தார். புனீத் ராஜ்குமார் இறந்தபோது ரஜினியின் மகள் துவங்கிய Hoote என்ற செயலி மூலம் தன் இரங்கலை தெரிவித்து இருந்தார் ரஜினிகாந்த்.

https://twitter.com/Mysteri13472103/status/1458369762166145030

அதில் 'நான் மருத்துவமனையில் இருந்தபோது அகால மரணம் அடைந்து விட்டார். அந்த செய்தி எனக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு தான் சொல்லப்பட்டது. அதை கேட்டு நான் மிக மிக வேதனை அடைந்தேன். என் கண்ணுக்கு முன்னால் வளர்ந்த குழந்தை, திறமையான அன்பும் பண்பும் கொண்ட அருமையான குழந்தை, புகழின் உச்சியில் இருக்கும் நேரத்தில் இவ்வளவு சின்ன வயதில் அவர் மறைந்திருக்கிறார்.

அவருடைய இழப்பை கன்னட சினிமாத் துறையால் ஈடு செய்யவே முடியாது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பதாருக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை. புனித் ஆத்மா சாந்தி அடையட்டும்'இதை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரஜினி, நீ இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை புனீத், Rest in peace my child என்று பதிவிட்டு இருந்தார். புனீத் மறைவிற்கு அறிக்கையை வெளியிட்டு இரங்கல் தெரிவிக்காமல், மகளின் செயலி மூலமாக ரஜினி தெரிவித்து இருந்தது அப்போது பலரின் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருந்தது.

இப்படி ஒரு நிலையில் பெங்களூரில் மறைந்த கன்னட நடிகர் திரு புனித் ராஜ்குமார் அவர்களின் நினைவஞ்சலி விழாவில் சூப்பர் ஸ்டார் நடிகர் திரு ரஜினிகாந்த் பங்கேற்று இருந்தார். புனித் ராஜ்குமார் மறைவையடுத்து அவரது கலைப்பணி மற்றும் சமூக சேவை ஆகியவற்றை கருத்திற்கொண்டு அவருக்கு உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படும் என கர்நாடகா முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்தார்.

இந்த விருது அர்ப்பணிப்பு விழா சமீபத்தில் நடைபெற்று இருந்தது. இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. விழாவில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம் இன்று பெங்களூர் சென்றார். இந்நிலையில், நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடகா ரத்னா விருது இன்று வழங்கப்பட்டது. ரஜினி இந்த விருதை வழங்க புனீத்தின் மனைவி விருதை பெற்றுக்கொண்டார்.

விருதை பெற்ற புனீத் ராஜ்குமாரின் மனைவி கண்ணீருடன் அந்த விருதை வாங்கிக்கொண்டார். இதை தொடர்ந்து இந்த விழாவில் புனீத் ராஜ்குமார் குறித்து பேசிய ரஜினிகாந்த்,"நடிகர் புனித் ராஜ்குமாருக்கு விருது வழங்கும் இந்த தினத்தில் மழை வந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் அவர்களது குடும்பத்திற்கு இறைவன் அருள் இருக்கிறது. அவர் இறைவனின் பிள்ளை' என்று உருக்கமாக பேசி இருந்தார்.

Tamil Behind Talkies AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை