அந்த இறுதி 40 நிமிடங்கள், சூர்யா நடிப்பு - ரெட்ரோ படத்தை பார்த்து ரஜினி சொன்னது, குஷியில் கார்த்திக் சுப்புராஜ்
ரெட்ரோ படம் பற்றி ரஜினி சொன்னதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியாகி இருந்த படம் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார்.
இந்த படத்தை தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்தார். இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும், பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கங்குவா படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை அடுத்து தற்போது நடிகர் சூர்யா அவர்கள் ரெட்ரோ படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இயக்கி இருக்கிறார்.
ரெட்ரோ படம்:
இந்த படத்தை சூர்யாவின் 2D மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்தது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து இருக்கிறார். இந்த படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், சுஜித் சங்கர் உட்பட பலர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள்.
கார்த்திக் சுப்புராஜ் பேட்டி:
இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் ரெட்ரோ படத்தை பார்த்து ரஜினிகாந்த் கூறியிருக்கும் விஷயத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக கார்த்திக் சுப்புராஜ் போட்ட பதிவில், ரெட்ரோ படத்தை தலைவர் ரஜினிகாந்த் பார்த்து விட்டார். அவருக்கு படம் ரொம்ப பிடித்திருந்தது.
Thalaivar watched #Retro & he Loved it.... 🕺🕺💥💥
— karthik subbaraj (@karthiksubbaraj) May 6, 2025
Exact words of Thalaivar......
"What an effort by whole team.... Suriya performance Super.... Last 40 minutes of the film Superb... Laughter touch is Fantastic....God bless"
Am flying now.....Love you Thalaivaaa ❤️❤️… pic.twitter.com/D9pBy5DjhJ
ரஜினி சொன்னது:
அவர் என்னிடம் சொன்னது, படக்குழு உழைப்பு நன்றாக இருக்கிறது. சூர்யாவின் நடிப்பு சூப்பர். குறிப்பாக படத்தினுடைய இறுதி 40 நிமிடங்கள் சூப்பர். படத்தில் இடம்பெற்ற சிரிப்பு காட்சிகள் எல்லாம் நன்றாக இருந்தது என்று கூறினார். அவருடைய இந்த வாழ்த்தால் நான் பறந்து கொண்டிருக்கிறேன். ஐ லவ் யூ தலைவா என்று கூறி ஜானி படத்தில் இடம்பெற்ற ரஜினியின் தோற்றத்தை ரெட்ரோ படத்தில் கார்த்திக் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
படத்தின் கதை:
படத்தில் ஜோஜு ஜார்ஜ் தூத்துக்குடியில் கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கிறார். இவரிடம் அடியாட்களாக சூர்யாவின் அப்பா வேலை செய்கிறார். ஒரு கட்டத்தில் சூர்யாவின் தந்தை சண்டையில் இறந்து விடுவதால் சூர்யாவை ஜோஜு ஜார்ஜின் மனைவி தான் எடுத்து வளர்க்கிறார். தனக்கு அடியாளாக சூர்யாவை ஜோஜு ஜார்ஜ் வளர்க்கிறார். இதற்கிடையில் சூர்யா, பூஜா காதலிக்கிறார்கள். இருவரும் திருமணம் செய்து கொள்ள தயாராகிறார்கள்.அப்போது சூர்யா அடிதடியை விட்டு விட முடிவு செய்தார். இன்னொரு பக்கம் அரசு கருவூல பொருட்களை எல்லாம் தன்னுடைய வளர்ப்பு தந்தையான ஜோஜுக்கு தெரியாமலேயே சூர்யா மறைக்கிறார். இதை அறிந்த ஜோஜு ஜார்ஜ், பூஜாவை கொலை செய்ய நினைக்க, சூர்யா தன்னுடைய வளர்ப்பு தந்தை ஜோஜு ஜார்ஜ் கையையே வெட்டி விடுகிறார். இதனால் சூர்யா சிறைக்கு செல்கிறார். பின் பூஜா நாட்டை விட்டு அந்தமான் செல்கிறார். பூஜாவை தேடி திரையிலிருந்து சூர்யா தப்பித்து அந்தமானுக்கும் செல்கிறார். சூர்யா இருக்கும் இடத்தை அறிந்த ஜோஜு சூர்யா தன்னுடைய அடியாட்களுடன் அந்தமானுக்கு செல்கிறார். அனைத்து பிரச்சனைகளையும் சூர்யா முறியடித்தாரா? பூஜா என்ன ஆனார்? சூர்யா- பூஜா இருவரும் சேர்ந்தார்களா? என்பது தான் படத்தினுடைய மீதி கதையே.