காவி உடை முதல் கைக்குழந்தை வரை - ரஜினி ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர். கேலி செய்யும் நெட்டிசன்கள்.

By Arun · 12/12/2022

ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை ரசிகர்கள் போட்டிருக்கும் வித்தியாசமான போஸ்டர் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கோலிவுட்டில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருக்கிறது. இதனால் இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும், வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினி அவர்கள் தற்போது ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ஜெயிலர் படம்:

இவர்களுடன் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கிறார்கள். மேலும், இந்த படம் 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை அடுத்து ரஜினி அவர்கள் இரண்டு படங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ரஜினி நடிக்கும் படங்கள்:

அதில் ஒன்று, தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் நடிக்கிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு சலாம் என பெயரிடப்பட்டுள்ளது. இன்னொரு படத்தை டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த இரண்டு படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் பிறந்தநாளை முன்னிட்டு ரஜினி ரசிகர்கள் பதிவிட்டு இருக்கும் போஸ்டர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இன்று ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

ரஜினியின் பிறந்த நாள்:

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுகவின் தலைவருமான மு.க ஸ்டாலின் டீவ்ட் ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், என் இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!. நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் என்று கூறி இருக்கிறார். இவரை தொடர்ந்து ரஜினியின் நண்பனும், நடிகருமான கமலஹாசன் கூறியிருப்பது, அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் வெற்றிப் பயணம் தொடர இச்சிறந்த நாளில் வாழ்த்துகிறேன் என்று கூறி இருக்கிறார். இப்படி ரஜினியின் பிறந்தநாளை ஒட்டி பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

மதுரை ரஜினி ரசிகர்கள் போஸ்டர்:

இந்த நிலையில் மதுரை ரசிகர்கள் ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு போஸ்டர் ஒன்று ஒட்டி இருக்கிறார்கள். அதில் அவர்கள் வாழும் வல்லவரே என்ற வாசகங்கள் எழுதி ரஜினியை திருவள்ளுவர் போன்று சித்தரித்து இருக்கிறார்கள். அதோடு ரஜினி வள்ளுவர் வடிவில் இருந்தாலும் காவி நிறத்தில் உடை அணிந்து வடிவமைத்திருக்கிறார்கள். ஏற்கனவே வள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது குறித்து பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் எழுந்திருக்கும் நிலையில் தற்போது ரஜினி திருவள்ளுவர் ஆக்கி அவருக்கு காவியை கொடுத்திருப்பது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

behindtalkies AMP · Quick view
View full