“சந்திரபாபு நாயுடு அது போல் செய்து இருக்க மாட்டார்.” சந்திரபாபு நாயுடுக்கு ஆறுதல் கூறிய ரஜினி காந்த்.
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செப்டம்பர் 23 வரை அவருக்கு நீதிமன்ற காவலில் வைத்துள்ளது. சந்திராபாபு நாயுடுவின் நெருங்கிய நண்பரான நடிகர் ரஜினிகாந்த் அவரின் மகனுக்கு தொலைபேசியில் பேசி ஆறுதல் தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்து இவரின் கைதானது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் வழக்கு குற்றம் சாட்டப்பட்ட தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வரும் ஆன சந்திரபாபு நாயுடு புலனாய்வுத்துறை செப்டம்பர் 9 அன்று கைது செய்தது காலை கைது செய்தது.
வழக்கு விபரம்:
அந்த வழக்கு விபரம் என்னவென்றால் மாநிலத்தில் புதிதாக ஐ. டி நிறுவனங்களை அமைக்க அனுமதி கொடுப்பதற்கு சட்ட விரோதமாக 118 கோடி பெற்றது வழக்கு பதிவு செய்யப்பட்ட அந்த வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் விசாரணை நடத்திய சந்திரபாபு நாயுடுவை அதிகாலை கைது செய்தனர். நந்தியார் பகுதியில் டிஐஜி தலைமையில் அதிக அளவில் போலீசார் செப்டம்பர் 9 அன்று அதிகாலை சந்திரபாபு நாயுடு கைது வீட்டிற்கு விரைந்து சென்றனர். அதிகாலையிலே அவரை கைது செய்ய அவருடைய வீட்டிற்கு போலீஸார்கள் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று உள்ளனர்.
அப்போது தொண்டர்கள் பெரும்பளவில் கூடியதால் அதிகாலை 3 மணி அளவில் குற்ற புலனாய்வு அதிகாரிகள் கைது செய்ய வந்த வாரம் கழித்தும் சந்திரபாபு நாயுடு எஸ்பிஜி பாதுகாப்பில் இருப்பதால் அவர் 6 மணி வரை கைது செய்ய முடியாது என்றும் கூறியுள்ளனர். மேலும் அதிகாரிகள் அங்கேயே தொடர்ந்து ஆறு மணி வரை காத்திருந்து அவரை கைது செய்துள்ளனர் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள். இந்த நிகழ்வானது ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சந்திரபாபு மீது வழக்கானது 2021 இல் பதிவு செய்யப்பட்டது.
ஆந்திர மாநிலம் மத்திய ஆலாநகர் இருப்பது கூட்டத்தை முடித்துக் கொண்டுதான் எடுத்துக் கொண்டிருந்தார் அப்போது அவருக்கு இந்த சம்மன் வழங்கப்பட்டுள்ளது இதனை அடுத்து என் வாகனத்தில் வருகிறேன் நான் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று கூறியுள்ளார். அண்மையில் சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் பேசிய போது நான் இன்னும் ஒரு சில தினங்களில் கைது செய்யப்படுவேன் என்றும் அப்படி இல்லை என்றால் தாக்கப்படுவேன் என்று கூறியிருந்தார். இந்த ஆண்டு ஆந்திர மாநில சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆறுதல் தெரிவித்த ரஜினி:
இந்நிலையில் அவரின் நெருங்கிய நண்பரான நடிகர் ரஜினி காந்த் அவரது மகனை நாரா லோகேஷ் தொலைப்பேசியில் அழைத்து அவருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் ‘சந்திரபாபு நாயுடு தவறு செய்யமாட்டார் என்றும் தன்னலமற்ற பொது சேவை அவரைக் காப்பாற்றும்’ எனவும் ரஜினி காந்த் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சில மாதங்களுக்கு முன் விஜயவாடாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ரஜினியும் சந்திரபாபு நாயுடுவும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். அப்போது அவரைப் பற்றி பேசிய ரஜினி, "எனக்கு 30 ஆண்டு கால நண்பர். சந்திரபாபு இந்திய அரசியல் மட்டுமின்றி உலக அரசியல் அனுபவம் வாய்ந்தவர். அரசியலில் அவர் ஒரு தீர்க்கதரிசி" என்று ரஜினிகாந்த் கூறியது குறிப்பிடத்தக்கது.