லோகேஷ் - ரஜினிகாந்த் கூட்டணியில் வெளிவந்த 'கூலி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

By subhashini · 14/8/2025

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் கூலி. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நாகார்ஜுனா, சௌபின் ஷாகிர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், அமீர்கான் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் வில்லன் நாகார்ஜுனா விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தன்னுடைய ஆட்களை வைத்து தங்க கடத்தலில் ஈடுபட்டு வருகிறார். அதோட தன்னுடைய கூட்டத்தில் மறைந்திருக்கும் கருப்பு ஆடுகளையும் அவர் வேட்டையாடி வருகிறார். நாகர்ஜுனாவிற்கு வலது கையாக தான் சௌபின் இருக்கிறார். இவர் போலீசுக்கு தகவல் சொல்பவர்களை எல்லாம் கொன்று அந்த உடல்களை அப்புறப்படுத்துகிறார். இதனால் இந்த கும்பலுக்கு சிக்கல் ஏற்படுகிறது.

அந்த கூட்டத்தில் கூலியோடு கூலியாக ஒரு போலீஸ் உளவாளி இருப்பது இவர்களுக்கு தெரிய வருகிறது.
இதற்கிடையில் ரஜினிகாந்தின் நண்பர் சத்யராஜ் இறந்த செய்தி வருகிறது. அப்போதுதான் தன்னுடைய நண்பனின் சாவில் மர்மம் இருப்பதை ரஜினிகாந்த் கண்டுபிடிக்கிறார். சத்யராஜின் மகளாக ஸ்ருதிஹாசன் இருக்கிறார். ஸ்ருதிஹாசன் உடைய துணையோடு தன் நண்பன் சத்யராஜை கொண்டவர்களை கண்டுபிடிக்க ரஜினிகாந்த் முயற்சிக்கிறார். அதற்குப் பின் வில்லன் நாகர்ஜுனா இருக்கும் இடத்திற்கே சென்று அவரை சந்திக்கும் சூழ்நிலை ரஜினிகாந்துக்கு ஏற்படுகிறது.

அதற்குப்பின் சத்யராஜை நாகர்ஜுனாவின் ஆட்கள் தான் கொலை செய்தார்கள் என்பது ரஜினிகாந்துக்கு தெரியவருகிறது. சத்யராஜை எதற்காக கொலை செய்தார்கள்? தன்னுடைய உயிர் நண்பனின் மரணத்திற்கு ரஜினிகாந்த் பழிதீர்த்தாரா? ரஜினிகாந்த்- நாகார்ஜுனா இடையேயான மோதல் என்ன? இருவருக்கும் பின்னணி என்ன? ரஜினிகாந்த் பின்னணி என்ன? என்பது தான் படத்தினுடைய மீதி கதை. படத்தில் ஹாஸ்டல் வார்டனாக ரஜினிகாந்த் வருகிறார்.

https://youtu.be/CZfzP8g7Yp4?si=diwg6ySzMO1hwUin

இவர் தன்னுடைய கலகலப்பான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்திழுத்து இருக்கிறார்கள் என்று சொல்லலாம். நிற்பது, நடப்பது, நடனம் ஆடுவது, பேசுவது என அனைத்திலும் தன்னுடைய ஸ்டைலை காட்டி அசர வைத்திருக்கிறார். ஆக்சன் காட்சிகள் எல்லாம் மிரட்டி இருக்கிறார். 30 வருடங்களுக்கு முன்பு அவருடைய தோற்றத்தை காட்டியிருப்பது ரசிகர்களுக்கு வெறித்தனமாக இருக்கிறது. இவரை அடுத்து படத்தில் வில்லனாக நாகார்ஜுனா மிரட்டி இருக்கிறார் என்றே சொல்லலாம். எதிரிகளை அவர் கொலை செய்யும் காட்சி அதிர்ச்சி அளிக்கிறது.

படத்தில் கேமியா ரோலில் வரும் அமீர்கான், உபேந்திரா எல்லாம் சிறப்பாக நடித்தி இருக்கிறார்கள். ஒரு பாட்டுக்கு மட்டும் வந்தாலும் பூஜா ரசிகர்களின் மனதை கொள்ளையடித்திருக்கிறார். அதற்குப்பின் சுருதிஹாசனுமே தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். சொல்லப்போனால் உலகநாயகன் மகள் என்பதை நிரூபித்து விட்டார் என்று சொல்லலாம். சத்யராஜும் தன்னுடைய அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார். இவர்களை தவிர படத்தில் வந்த அனைத்து கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்கள்.

படத்தினுடைய ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது. குறிப்பாக, அனிருத்தினுடைய பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. வழக்கமான பழிவாங்கல் கதையாக இருந்தாலும் அதை இயக்குனர் பரபரப்பாக கொண்டு சென்றிருக்கிறார். ஆனால், சில காட்சிகள் தான் சழிப்படைய வைத்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக காண்பித்து இருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும். மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக தான் இருக்கிறது.

நிறை:

நிறை ரஜினிகாந்த் நடிப்பு

பின்னணி இசை, ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலம்

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்

விறுவிறுப்பான காட்சிகள்

குறை:

வழக்கமான பழிவாங்கல் கதை

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

கதைக்களம் கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் இன்னும் கொஞ்சம் சுவாரசியத்தை கொடுத்திருக்கலாம்

மொத்தத்தில் கூலி- கமர்ஷியல் ரசிகர்களுக்கு விருந்து

இறுதி அலசல் :

தனது நண்பனை கொன்றவரை கூலியாக சென்று பழி தீர்க்கும் ஒரு சாதாரண கதையை முடிந்த அளவு மாஸாக கொடுத்துள்ளார் லோக்கி. ரஜினியின் ஸ்டைல், நாகர்ஜுனாவின் வில்லத்தனம், தந்தையை இழந்த ஸ்ருதியின் வலி, உபேந்திராவின் கேமியோ, ரஜினியின் டீ-ஏஜிங் பிளாஷ்பேக், ஆங்காங்கே வின்டேஜ் பாடல்கள் என்று ஒரு கமெர்ஷியல் படத்தையே கொடுத்துள்ளார் லோக்கி. ஆனால், நாகர்ஜுனா சொன்னது போல இது 100 பாட்ஷாவிற்கு எல்லாம் ஈடாகாது. 1000 கோடி சந்தேகமே

Tamil Behind Talkies AMP · Quick view
View full