தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கொரோனாவின் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதே போல தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்ல வேண்டுமென்றால் தகுந்த காரணத்தை கூறி விட்டு இ-பாஸ் வாங்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும் என்றும் விதிமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் இந்த அவ்வளவு எளிதாக கிடைப்பதும் கிடையாது. இப்படி ஒரு நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொகுசு காரை ஓட்டிச் செல்வது போல ஒரு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது

ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் போது நடிகர் ரஜினிகாந்த் எங்கே சென்றார்? எப்படி சென்றார்? அவர் நீ பாஸ் வாங்கி சென்றாரா? போன்ற பல்வேறு கேள்விகள் எழுப்பப் பட்டது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கமளிக்கையில் ரஜினிகாந்த் இ -பாஸ் வாங்கி கொண்டுதான் சென்னையிலிருந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் கேளம்பாக்கத்திற்கு சென்றார் என்று உறுதி செய்திருந்தார். உண்மையில் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து கேளம்பாக்கத்தில் இருக்கும் தனது பண்ணை வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

Advertisement

ரஜினிகாந்த் கார் ஓட்டுவது போல புகைப்படம் வைரலானது தொடர்ந்து ரஜினியின் மகள் சௌந்தர்யா மற்றும் சௌந்தர்யாவின் இரண்டாவது கணவர் மற்றும் ரஜினியின் மருமகன் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலானது இந்தநிலையில் கடந்த 26ஆம் தேதி சென்னையிலிருந்து செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் வறுத்து இருக்கும் புது பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு காரில் சென்றபோது வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போக்குவரத்து போலீசார் ரஜினியின் காரை மறித்து சோதனை செய்து உள்ளார்கள.

அப்போது காரை ஓட்டி வந்த ரஜினிகாந்த் சீட் பெல்ட் அணிய வில்லை என்று கூறி சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார் ரஜினிகாந்திற்கு 100 ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக அபராத ரசீதின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் ரஜினிகாந்த் சென்ற வாகனத்தின் எண், விதியை மீறியதாக அவரின் பெயர் உட்பட ரஜினிகாந்திற்கு அபராதம் விதித்த போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் பழனி என்பவர் அபராதம் விதித்துள்ள விபரங்களும் அந்த ரசீதில் புகைப்படத்தில் தெளிவாக தெரிகிறது.

Advertisement

Advertisement
Advertisement